ஈழம் தொடர்பில் கருத்து வாக்கெடுப்பு நடத்தக் கோரிய இந்திய அமைச்சர் பாஸ்வான் மறைந்தார்

Source: Raj
இந்தியாவில் நுகர்வோர் துறை அமைச்சராக இருந்தவரும் லோக் ஜன சக்தி கட்சித் தலைவரான ராம் விலாஸ் பாஸ்வான் அவர்கள் நேற்று காலமானார். அவருக்கு வயது 74. இந்திய அரசியலில் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கிவந்த முக்கிய தலித் தலைவர் அவர். ஈழம் என்ற தனி நாடு குறித்து சர்வதேச சமூகம் அங்கு கருத்து வாக்கெடுப்பை நடத்தவேண்டும் என்று சென்னையில் 2012 ஆம் ஆண்டு நடந்த முள்ளிவாய்க்கால் நினனவு நிகழ்வின்போது பேசியவர் ராம் விலாஸ் பாஸ்வான் ஆவார். ராம் விலாஸ் பாஸ்வான் அவர்கள் குறித்த பதிவை முன்வைப்பவர் இந்தியாவின் ஹைதராபாத் மத்திய பல்கலைக் கழகத்தின் சமூகவியல் துணை பேராசிரியர் முனைவர் இரா.திருநாவுக்கரசு அவர்கள். நிகழ்ச்சியாக்கம்: றைசெல்.
Share