ராஜபக்ச குழு சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டது - முன்னாள் போலீஸ் பேச்சாளர் ஜெயகொடி
Mr Jayakody
இலங்கையின் முன்னாள் அதிபர் ராஜபக்ச மற்றும் அவரது குழுவின் சட்டவிரோதச் செயல்களுக்கு உடன்படாத காரணத்தால் கடத்தப்பட்டு கொலை செய்யப்படும் ஆபத்தை எதிர்கொண்டதாகவும் இதனால் உயிர் தப்பிவந்து ஆஸ்திரேலியாவில் தஞ்சம் புகுந்ததாகவும் சொல்கிறார் இலங்கையின் முன்னாள் போலீஸ் பேச்சாளர் பிரஷாந்த ஜெயகொடி. தற்போது இலங்கையில் தனக்குப் பயம் ஏதும் இல்லை எனத் திடமாக நம்பி மீண்டும் காவல் துறையில் இணைந்து பணியாற்ற இலங்கை திரும்பியுள்ளார் பிரஷாந்த ஜெயகொடி. Perth விமானநிலையம் செல்லும் வழியில், தொலைபேசியினூடாக மகேஸ்வரன் பிரபாகரன் அவரைத் தொடர்பு கொண்டு உரையாடினார். ஜெயகொடி பற்றிய இலங்கை நாளிதழ் செய்திகள்: மற்றும் வீடியோ .....http://www.dailymirror.lk/64865/i-left-sl-because-of-threats-from-gota-ex-ssp-jayakody http://island.lk/index.php?page_cat=article-details&page=article-details&code_title=120349
Share