அகதி 02: தமிழ்நாட்டை நோக்கி வீசிய அகதிகள் அலை

Source: Maga.Tamizh Prabhagaran
தேவியம்மா, இலங்கை ராணுவத்தின் வன்முறைக்கு அஞ்சி தமிழ்நாட்டில் தஞ்சமடைந்த லட்சக்கணக்கான அகதிகளில் இவரும் ஒருவர். அவர் தஞ்சமடைந்து 30 ஆண்டுகள் நிறைவடைய போகின்றன. முகாமில் அனல் கனன்று கொண்டிருந்த அவரின் வீட்டிலிருந்து கடந்த காலத்தை நினைவுக்கூர்ந்த பொழுது தேவியம்மாவால் தனது கண்ணீரை கட்டுப்படுத்த முடியவில்லை. இலங்கை ராணுவம் அவர் கணவரின் கழுத்தில் கயிற்றினை இறுக்கி ஜீப்பில் இழுத்த சென்ற காலமது. அந்த வலிகளிலிருந்து மீண்டு தனது மகள்களுக்கு நல்ல வாழ்க்கையை அமைத்து கொடுத்திருக்கிறர். ஆனால் ‘அகதி’ என்ற அடையாளம் தேவியம்மாவை இன்றும் வாட்டிக் கொண்டிருக்கின்றது. தமிழ்நாட்டு முகாமிலேயே பிறந்த காஞ்சனாவும் அவரை போலவே உணர்கிறார். இதோடு இப்பாகத்தில், அகதிகளுக்கு தமிழக அரசு செய்து கொடுத்துள்ள வசதிகள் மற்றும் அதன் சூழலை முகாம்வாசிகள் விவரித்துள்ளனர். அகதிகளாக உள்ள மக்களை தமிழ்நாட்டு மக்கள் எப்படி அணுகுகின்றனர்? கேளுங்கள்! அகதிகளின் கதை வழியாக அதை எடுத்து கூறுகிறார் ஊடகவியலாளர் மகா.தமிழ்ப் பிரபாகரன். இதனை SBS தமிழ் வானொலிக்காக தயாரித்திருப்பவர் றைசெல்.
Share



