இந்திய அமைச்சர்கள் தமிழகத்திற்கோ இலங்கை அரசின் முக்கிய தலைமைகள் இந்தியாவுக்கோ வரும் பொழுது முகாம்களில் 'ரோல் கால்' நடப்பது வழக்கம் என்கின்றனர் அகதிகள். தமிழகத்தின் முக்கிய அரசியல் தலைவர்கள் ஒரு முகாமின் சுற்றுவட்டார பகுதியை கடக்கும் போது கூட இது நடப்பதாக வருந்துகின்றனர். கூடுதலாக, முகாம்களுக்கு வெளியே தங்கியிருக்கும் அகதிகளின் நிலையை தனது அனுபவத்துடன் பகிர்ந்து கொள்கிறார் அகதி என்ற அடையாளத்துடன் வசிக்கும் எழுத்தாளர் பத்தி நாதன்.
'அகதி' என்ற ஒலித்தொடரை வழங்குபவர் ஊடகவியலாளர் மகா.தமிழ்ப் பிரபாகரன், இதனை SBS தமிழ் வானொலிக்காக தயாரித்திருப்பவர் றைசெல். பாகம்: 5.




