SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
அகதிகளும் குடும்பங்களை வரவழைக்க அனுமதிக்கும் புதிய கொள்கைக்கு வரவேற்பு!

Silhouette of young Asian mother and cute little daughter looking at airplane through window at the airport while waiting for departure. Family travel and vacation concept Source: Moment RF / d3sign/Getty Images
ஆஸ்திரேலியாவிற்கு படகு மூலம் புகலிடம் தேடி வந்து அவர்களின் அகதி கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டு நிரந்தர வதிவிட வீசாவில் உள்ளவர்கள் தங்களின் மற்றைய குடும்ப உறுப்பினர்களை ஆஸ்திரேலியாவிற்கு அழைத்து வர விண்ணப்பித்த்தால் இனிமேல் குடிவரவு திணைக்களம் அவர்களையும் பிறவிண்ணப்பதாரர்கள் போன்று சமமாக நடத்தும் என்று அரசு அறிவித்துள்ளது. இது பல ஆயிரக்கணக்கான அகதிகளுக்கு நல்ல செய்தியாக அமைந்துள்ளது என்று அகதிகளுக்காக குரல் தரும் அமைப்புகள் கூறுகின்றன. அரசின் இந்த அறிவிப்பு குறித்து அகதியாக ஏற்கப்பட்டு, நிரந்தர வதிவிட விசாவில் மெல்பன் நகரில் வாழும் துரை அவர்களோடு உரையாடுகிறார் றைசெல்.
Share