SKIP TO MAIN CONTENT

“தடுப்புமுகாமிலிருந்து குமாரை விடுதலை செய்” – ஐ.நா.

Alison Battisson
Alison Battisson Source: Human Rights For All

ஆஸ்திரேலிய தடுப்பு முகாமொன்றில் தடுத்து வைத்திருக்கும் தமிழ் புகலிடக் கோரிக்கையாளர் குமாரை (அவரது உண்மையான பெயர் அல்ல) உடனடியாக விடுவிக்குமாறு, தடுப்புக் காவல் குறித்த ஐக்கிய நாடுகளின் தன்னிச்சையான குழு (Working Group on Arbitrary Detention [WGAD]) அழைப்பு விடுத்துள்ளது. குமார் விவகாரத்தில், மனித உரிமைகளுக்கான உலகளாவிய பிரகடனத்தின் ஐந்து கோட்பாடுகளையும் ஆஸ்திரேலிய அரசு மீறி உள்ளது என்று, மே 28, 2019 அன்று WGAD வெளியிட்ட அறிக்கை கூறுகிறது. மேலும் மனித மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான நான்கு சர்வதேச உடன்படிக்கைகளுக்கும் முரணாக ஆஸ்திரேலிய அரசு நடப்பதாகக் கண்டறிந்துள்ளது. "அனைவருக்கும் மனித உரிமைகள்" (Human Rights For All- HR4A) என்ற அமைப்பு, தடுப்பு முகாமிலிருந்து குமாரை விடுவிப்பதற்காகக் குரல் கொடுத்து வருகிறது. குமாரின் தற்போதைய நிலை குறித்தும், HR4Aயின் செயற்பாடுகள் குறித்தும் அதன் நிறுவனர் அலிசன் ஃபட்டிசன் குலசேகரம் சஞ்சயனுடன் பேசுகிறார். அலிசன் ஃபட்டிசன் ஆங்கிலத்தில் வழங்கிய பதில்களுக்குத் தமிழில் குரல் தருகிறார் கல்பனா சபாபதி.

Published

By Kulasegaram Sanchayan

Source: SBS

Skip to podcast episode content

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now