அதிமுக பொது செயலாளராக சசிகலா நியமனம்
Public Domain Source: Public Domain
அதிமுக பொது செயலாளராக சசிகலாவை நியமித்து, கட்சி நிர்வாகத்தை ஏற்க அங்கீகாரம் வழங்கியும், அதிமுகவின் பொது குழுவில் நேற்று ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதன் மூலம் அதிமுகவின் புதிய பொதுச் செயலாளராக ஜெயலலிதாவின் தோழி சசிகலா நியமிக்கப்பட்டுள்ளார். இது வரை எதுவும் பேசாமல் மௌனமாக இருக்கும் சசிகலாவால் அரசியலில் சாதிக்க முடியுமா என்ற கேள்வியும் எழும்பியுள்ளது. இது ஒரு புறம் இருக்க, முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் சாவில் தமக்கே சந்தேகம் இருப்பதாக உயர் நீதி மன்றத்தின் நீதிபதி நேற்று நீதி மன்றத்தில் தெரிவித்து இருப்பது, தமிழகத்தில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கூடுதல் விவரங்களுடன் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.
Share



