SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக Pop Desi எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
தமிழர்களின் தொன்மையைத் தேடி கடல் ஆமைகளுடன் பயணம் செய்தவர்!

Source: Orissa Balu
தமிழர்களின் தொன்மையை உலகளவில் கடல் ஆமைகள் வழியாகத் தேடியபவர் ஒரிசா பாலு. தமிழர் வரலாற்றின் மரபுசார் அறிவை நவீன தொழில்நுட்பங்கள் மூலமாக வெளிக்கொண்டு வந்தார். ஆமைகள் மூலம் நீரோட்டத்தை அறிந்து, பழங்கால தமிழர்கள் கடற்பயணம் மேற்கொண்டதை கண்டறிந்தவர் இவர். ஒரிசா பாலு அவர்கள் தனது 60ஆவது வயதில் நேற்று (2023ஆம் ஆண்டு அக்டோபர் 6ஆம் நாள்) காலமானார். அவர் 2016ம் ஆண்டு SBS தமிழ் ஒலிபரப்புக்கு வழங்கிய நேர்காணல் இது. அவருடன் உரையாடியவர் றேனுகா துரைசிங்கம்.
Share


