ஆஸ்திரேலியாவிலுள்ள புலம்பெயர்ந்த மக்கள் மத்தியில் விளையாட்டு ஒன்றைப் பார்வையிடுவதாகட்டும், அல்லது களத்திலிறங்கி விளையாடுவதாகட்டும், அல்லது பிடித்த விளையாட்டு வீரர் ஒருவரை ஆதரிப்பதிலாகட்டும், இவை எல்லாவற்றிலும் முதலிடம் பெறுவது AFL ஆகும்.
இதற்கேற்றாற்போல் AFL போட்டியாளர்களில் கால்வாசிப்பேர் பல்வேறுபட்ட கலாச்சாரப் பின்னணிகளிலிருந்து வந்தவர்கள் என AFL தெரிவித்துள்ளது.
ஆஸ்திரேலியர்களுக்கென ஆஸ்திரேலியர்களால் கண்டுபிடிக்கபட்ட இவ்விளையாட்டு அன்று தொட்டு இன்றுவரை அனைவரையும் கவர்ந்த ஒன்றாக காணப்படுவதாக AFL இன் NSW மற்றும் ACT பகுதி முகாமையாளர் Joseph La Posta தெரிவித்தார்.
AFL விளையாட்டில் அதீத பிரியம் கொண்டவர்களில் ஒருவரான இத்தாலிய பின்னணி கொண்ட Diego Ghirardi, AFL விளையாட்டு சமூகத்தை ஒன்றிணைப்பதாக குறிப்பிட்டார்.
அதேநேரம் AFL விளையாட்டில் உள்ள பல்கலாச்சாரத்தன்மைதான் தம்மைப் போன்ற பலர் இதனை விரும்புவதற்குக் காரணம் என பஞ்சாபிப் பின்னணி கொண்ட Avtar Singh கூறினார்.
இதேவேளை AFL விளையாட்டில் பிரகாசித்து வரும் ஒருவர் இந்தியப் பின்னணி கொண்ட Dilpreet Singh. Geelong Falcons கழகத்தில் இணைந்திருக்கும் இவர் விரைவில் AFL அணிக்குள் சேர்த்துக்கொள்ளப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
AFL Multicultural Program பற்றி மேலதிகமாக தெரிந்துகொள்வதற்கு http://www.aflcommunityclub.com.au/index.php?id=636 என்ற இணையத்தளத்திற்குச் செல்லுங்கள்.