சிங்கப்பூர்: 40-over-40 என்ற விருது, நாற்பது வயதிற்கும் மேற்பட்ட வயதுடைய பெண்கள் வாழ்க்கைப் பாதையை மாற்றி, ஒரு புதிய தொடக்கத்தை ஆரம்பித்தவர்கள், புதிய வணிக நிறுவனங்களை உருவாக்கியவர்கள் அல்லது ஒரு புதிய தொழிலைத் தொடங்கிய பெண்களைக் கொண்டாட வடிவமைக்கப்பட்டுள்ள விருதாகும். இந்திர ராணி லவன் ஈஸ்வரன் ஒரு எழுத்தாளர், கவிஞர், நாடக ஆசிரியர், பல நடன மற்றும் நாடக மேடை தயாரிப்புகளை எழுதி இயக்கியுள்ளார். நண்பர்களின் ஊக்கத்தினால் தனது 60 வயதுகளின் பிற்பகுதியில் தனது வீட்டிலேயே ஒரு சிறப்பு உணவகத்தை ஆரம்பித்தார். யாழ்ப்பாணத்திலிருந்து மலேசியா சென்றவர்கள் வாழ்க்கை, அவர்கள் வரலாறு, வேர்கள், மற்றும் சமையல் முறைகள் குறித்து, ஒரு முன்னோடியின் பேத்தி கூறுவது போல் தெளிவான நினைவுகள் மற்றும் மயக்கும் கதைகளை உள்ளடக்கிய ஒரு அழகான நூலை, தனது 70ஆவது வயதில் எழுதி பிரசுரித்துள்ளார்.
தான் பெற்றிருக்கும் விருது, அவரது சமையல் திறன் மற்றும் அவரது புத்தகம் பற்றி இந்திர ராணி லவன் ஈஸ்வரன், குலசேகரம் சஞ்சயனிடம் பேசுகிறார்.
இரண்டு பகுதிகளாக பதிவாகியுள்ள நேர்காணலில், முதல் பாகம் இது.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.
டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
Share




