Aaron Teo - வாகனம் ஓட்டும் போது சாலையில் தான் பார்த்த ஒரு துன்புறுத்தல் அல்லது வெறுப்பு சம்பவத்தில் எவ்வாறு தலையிட்டு நிறுத்துவது என்று யோசித்து தான் அருகில் சென்ற போது பலர் இணைந்து வந்தது தனக்கு தன்னம்பிக்கை அளித்து என்கிறார்.
மக்கள் தலையிடும்போது, அது ஒரு மாற்றத்தை உருவாக்குகிறது. தலையீடுகள் வெறுப்பு நடத்தையை முழுமையாக நிறுத்த முடியாமல் போனாலும், அந்த தருணத்தில் அதைத் தடை செய்கிறது. மேலும், வெறுப்பான நடத்தை ஏற்றுக்கொள்ளப்படாதது என்பதை வெளிப்படையாக அது சுட்டிக்காட்டுகிறது என்று கூறுகிறார் Tackling Hate Lab-இன் Dr Haily Tran.
ஒரு பதற்றமான சம்பவத்தின் போது, நம்முடைய முழு கவனத்தையும் ஆற்றலையும் குற்றம் செய்பவர்மீது செலுத்துவது எளிதாக இருக்கும். ஆனால் பாதிக்கப்பட்டவரைப் பார்த்துக்கொள்வதே நாம்செய்யக்கூடிய மிகவும் பயனுள்ள செயல்களில் ஒன்றாகும்.
எல்லா சமயங்களில் பார்வையாளர்கள் தங்கள் குரலை எழுப்புவதோ அல்லது தலையிடுவது இல்லை என்பதை நாம் அறிவோம். இப்படியான சந்தர்ப்பங்களில் மக்களின் விருப்பங்களுக்கும், அவர்கள் உண்மையில் செய்கிற செயல்களுக்கும் இடையில் வித்தியாசம் உள்ளது என்கிறார் மேற்கு சிட்னி பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் Kevin Dunn.
நடவடிக்கை எடுக்கவும், குரல் கொடுக்கவும் மக்களைத் தடுக்கின்ற முக்கிய தடைகள் – தாங்களே இலக்காகி விடுவோமோ என்ற பயம், என்ன செய்ய வேண்டும் என்ற அறிவின்மை, மேலும் நடந்த நிகழ்வு உண்மையில் இனவெறி சம்பவமா என்ற சந்தேகத்திலான குழப்பம் போன்றவை என்கிறார் பேராசிரியர் Kevin Dunn.
SBS Examines-இற்காக Nic Zoumboulis ஆங்கிலத்தில் தயாரித்த விவரணத்தை தமிழில் தயாரித்து வழங்குகிறார் செல்வி.
SBS தமிழின் ஏனைய நிகழ்ச்சிகளைக் கேட்க எமது podcast பக்கத்திற்குச் செல்லுங்கள். SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக SBS South Asian எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tunein பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலி யில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள். SBS South Asian YouTube channel ஊடாக எமது podcasts மற்றும் videos-ஐப் பார்வையிடுங்கள்.