அத்துடன் கலல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் ஆகியோரின் பிறமொழிப் படங்களுக்கு பின்னணிக் குரல் கொடுத்த அனுபவங்களை பிரத்தியேகமாகப் பகிர்கிறார். மேலும் தனது மனைவி பிள்ளைகள் பற்றியும் மற்றும் பல விடயங்களையும், சென்னையில் உள்ள மனோ அவர்களின் இல்லத்துக்குச் சென்று அவரைச் சந்தித்து அறிந்துகொள்கிறார் மகேஸ்வரன் பிரபாகரன். மனோவின் பிரபல்ய பாடல்களின் ஒலிக் கீற்றுகளும் செவ்வியின் இடையே ஒலிக்கின்றன.
பாடகர் மனோவுடன் அவரது இல்லத்தில் ஒரு பிரத்தியேகச் சந்திப்பு - நிறைவுப் பாகம்.
Singer Mano with his family
இளையராஜாவின் இசை அமைக்கும் ஆற்றலை வியக்கும் மனோ அவரது இசையில் தான் பாடிய ஒரு பிரபல பாடலின் சங்கதிகளைப் பாடிக் காட்டுகிறார்.
Share