ஆஸ்திரேலிய தலைநகர் கான்பராவில் வளர்ந்த ஷங்கரி சந்திரன், ஒரு தசாப்தம் லண்டனில் சமூக நீதி துறையில் ஒரு வழக்கறிஞராகப் பணியாற்றி, மீண்டும் ஆஸ்திரேலியா திரும்பியுள்ளார். கணவர் மற்றும் நான்கு குழந்தைகளுடன் சிட்னியில் வாழ்ந்து வருகிறார். இந்த ஆண்டு, ஷங்கரி தனது முதல் நாவல், Song of the Sun God, என்ற தலைப்பிலான நூலை வெளியிட்டுள்ளார். அவரது இரண்டாவது நூல் விரைவில் வெளிவர இருக்கிறது. Song of the Sun God நூல் குறித்தும், அவரது பின்னணி, ஆர்வம் என்பன குறித்தும், ஷங்கரி, குலசேகரம் சஞ்சயனுடன் ஆங்கிலத்தில் பேசுகிறார். நேர்காணலின் இரண்டாம் பாகம் இது. முதலாம் பாகத்தைக் கேட்க, இங்கே சொடுக்கவும். ஆங்கிலத்தில் அமைந்துள்ள ஷங்கரியின் பதில்களைத் தமிழில் கேட்க, இங்கே சொடுக்கவும்.