இலங்கையின் 76வது சுதந்திர தினம் கொழும்பில் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் இடம்பெற்றது. சுதந்திர தினத்தன்று வடக்கு கிழக்கு பகுதிகளில் எதிர்ப்பு போராட்டங்கள் நடைபெற்றன. தடுப்பூசி மருந்து இறக்குமதியில் ஊழல் குற்றச்சாட்டுக்களை அடுத்து அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெல கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலை வழக்கில் நீண்ட காலம் சிறை தண்டனை அனுபவித்து வந்த நிலையில் விடுவிக்கப்பட்டுள்ள சாந்தன் நாடு திரும்புவதற்கு எந்தவித தடையும் இல்லையென இலங்கை அரசு அறிவித்துள்ளது. இவைகள் உள்ளிட்ட செய்திகளோடு “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சிக்காக விவரணமொன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக Pop Desi எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
Share





