ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் கூட்டத் தொடர் ஜெனிவாவில் ஆரம்பமாகியுள்ள நிலையில் இலங்கை விடயங்களும் இங்கு பேசப்படவுள்ளது. இந்திய - இலங்கை மீனவர் பிரச்சினை இரு தரப்பிலும் இடம்பெற்று வரும் போராட்டங்கள் காரணமாக நெருக்கடி நிலைக்குள்ளாகியுள்ளது. ஊதிய உயர்வு கோரி பல்கலைக்கழகங்களின் கல்விசாரா ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு காரணமாக கடந்த இரு நாட்கள் நாடளாவிய ரீதியில் பல்கலைக்கழகங்களின் கல்வி நடவடிக்கைகளில் பாதிப்பு ஏற்பட்டது. இவை உள்ளிட்ட செய்திகளோடு “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சிக்காக விவரணமொன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக Pop Desi எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
Share





