மூன்று தலைமுறையினரின் கதை மூலம் இலங்கை அரசியலும் வாழ்வும்
Shankari Chandran Source: Shankari Chandran
ஆஸ்திரேலிய தலைநகர் கான்பராவில் வளர்ந்த ஷங்கரி சந்திரன், ஒரு தசாப்தம் லண்டனில் சமூக நீதி துறையில் ஒரு வழக்கறிஞராகப் பணியாற்றி, மீண்டும் ஆஸ்திரேலியா திரும்பியுள்ளார். கணவர் மற்றும் நான்கு குழந்தைகளுடன் சிட்னியில் வாழ்ந்து வருகிறார். இந்த ஆண்டின் ஆரம்பத்தில், ஷங்கரி தனது முதல் நாவல், Song of the Sun God, என்ற தலைப்பிலான நூலை வெளியிட்டுள்ளார். The Barrier என்ற தலைப்பிலான அவரது இரண்டாவது நூல் இந்த வாரம் வெளியாகியுள்ளது. Song of the Sun God நூல் குறித்தும், அவரது பின்னணி, ஆர்வம் என்பன குறித்தும், ஷங்கரி, குலசேகரம் சஞ்சயனுடன் பேசுகிறார். ஆங்கிலத்தில் அமைந்துள்ள ஷங்கரியின் பதில்களைத் தமிழில் தருகிறார் சுபத்திரா சுந்தரலிங்கம். ஷங்கரி சந்திரன் வழங்கியுள்ள ஆங்கில நேர்காணல் இரண்டு பாகங்களாகப் பதிவாகியுள்ளன. அவற்றைக் கேட்க, கீழேயுள்ள இணைப்பை சொடுக்குங்கள்.
Share