Watch FIFA World Cup 2026™

LIVE, FREE and EXCLUSIVE

சூப்பர் அனுவேசனில் கொண்டுவரப்பட்டுள்ள புதிய மாற்றம்!

Australian dollars

تتحدث حلقة بودكاست لنحكِ عن المال عن أبرز خصائص صناديق السوبر أو التقاعد، لمعرفة كيف يمكن اختيار الصندوق الانسب في أستراليا. Source: AAP

இந்த ஜூலை மாதத்தில் இருந்து சூப்பர் அனுவேசன்-Superannuation திட்டத்தில் அரசாங்கம் சில மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. இந்த மாற்றங்கள் பொதுவாக சூப்பர் அனுவேசன் கணக்கில் மிக குறைந்த அளவில் பணம் வைத்திருப்பவர்களை பாதிக்கும். இதுதொடர்பில் விளக்குகிறார் திரு.யூசுப் அவர்கள். அவருடன் உரையாடுபவர் றேனுகா துரைசிங்கம்


Published

By Renuka

Source: SBS




Share this with family and friends


இந்த ஜூலை மாதத்தில் இருந்து சூப்பர் அனுவேசன்-Superannuation திட்டத்தில் அரசாங்கம் சில மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. இந்த மாற்றங்கள் பொதுவாக சூப்பர் அனுவேசன் கணக்கில் மிக குறைந்த அளவில் பணம் வைத்திருப்பவர்களை பாதிக்கும். இதுதொடர்பில் விளக்குகிறார் திரு.யூசுப் அவர்கள். அவருடன் உரையாடுபவர் றேனுகா துரைசிங்கம்


வேலையில் இருந்து சம்பாதிக்கும் ஒருவருக்கு 9.5 சதவீதம் superannuation கொடுக்க வேண்டும் என்று சட்டம் இருக்கிறது

சிலர் ஒரு சில மாதங்களோ அல்லது வருஷங்கள்  மாத்திரம் வேலை செய்திருந்தால், அவருடைய superannuation account-இல் அதிக பணம் இருக்க வாய்ப்பு இருக்காது.  இன்னும் சிலர் ஒன்றுக்கு மேலாக பல superannuation account வைத்திருக்கலாம்.  அதில் சிலவற்றில் balance குறைவாக இருக்கலாம்.

எல்லா superannuation நிறுவனங்களும் நாம் வைத்திருக்கும் account-ஐ பராமரிக்க Charges, Fees என்று கட்டணங்கள் நமது superannuation பணத்தில் இருந்தே எடுக்கிறார்கள்.

உதாரணமாக என்னுடைய account-இல் 6000 டாலர்கள் இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம்.  அதில் 5 சதவீதம் வருமானம் வந்தால் 300 டாலர்கள் சேரும்.  அதே வருடத்தில் அந்த நிறுவனம் charges, account keeping fees, insurance premium என்று சொல்லி 400 டாலர்கள் எடுத்தால், என்னுடைய account-இல் மிஞ்சுவது 5900 டாலர்கள்தான்.

இந்த மாதிரி பணம் குறைந்து போவதை தடுக்கும் வகையில் தான் அரசாங்கம் இந்த புதிய சட்டத்தை கொண்டு வந்துள்ளது.

இந்த சட்டத்தின் முக்கிய அம்சங்கள் என்ன?

எந்த ஒரு superannuation account-இல் 6000 டாலருக்கு குறைவாக balance இருந்து, அந்த account-இல் கடந்த 16 மாதங்களில் எந்த விதமான மாற்றங்களும் இல்லாமல் இருந்தால், அதாவது பணம் போடுவது, முதலீட்டில் மாற்றங்கள் போன்றவை இல்லாமல் இருந்தால், அந்த account- ஐ அந்த superannuation நிறுவனம் Australian Tax Office-க்கு அனுப்ப வேண்டும்

நான் முன்பு சொன்ன உதாரணத்தில் என்னுடைய account-இல் 6000 டாலர் இருக்கிறது.  கடந்த 16 மாதங்களில் நான் அந்த account-இல் மேற்கொண்டு எந்த பணமும் போடவில்லை.  அந்த பணத்தை எப்படி முதலீடு செய்ய வேண்டும் என்பதிலும் நான் எந்த மாதிரியான மாற்றமும் செய்யவில்லை.

அதன் மூலம் எனக்கு insurance இருந்தால், அதிலும் நான் எந்த மாற்றமும் செய்யவில்லை என்று வைத்துக்கொள்வோம்.  இந்த account-ஐ அரசாங்கம் IN-ACTIVE-செயலற்ற account என்று கருதுகிறது.  எனவே இந்த புதிய சட்டத்தின் படி இந்த account-இல் உள்ள balance-இருப்பு தொகை அனைத்தும் Tax Office-க்கு மாற்றப்படும். 

எனக்கு வேறு superannuation account இருந்தால் அதனுடன் இந்த தொகையை சேர்க்கும்படி Tax Office-ஐ கேட்கலாம்.

அப்படி வேறு எந்த account-ம் இல்லை என்றால், நான் பிற்காலத்தில் அதை பற்றி விசாரிக்கும் வரை அது Tax Office-இன் account-லேயே இருக்கும்.

இது ஒரு நல்ல திட்டம். ஆனால் இது ஒரு சிலரை பாதிக்கலாம். காரணம், இந்த திட்டம் பற்றி பலருக்கு தெரிந்து இருக்காது.

முக்கியமாக, இது இந்த மாதத்தில் இருந்துதான் அமலுக்கு வருகிறது.  சிலர் வெளிநாட்டில் இருக்கலாம், சிலருக்கு மொழி பிரச்சினையால் இதன் விபரங்கள் புரியாமல் போகலாம்.  அவர்களுடைய account-இன் balance 6000 டாலருக்கு குறைவாக இருந்தால், அது அவர்களுக்கு தெரியாமலேயே மூடப்படும்.  பிறகு Tax Office- க்கு மாற்றப்படும்.

இதனால் என்ன பாதிப்பு?

நிறைய பேர் தங்களுடைய Life insurance மற்றும் Permanent Disability Insurance-ஐயும் superannuation account-உடன் சேர்த்து வைத்திருக்கிறார்கள்.   இதற்க்கு காரணம் இந்த insurance-கள் superannuation account-க்கு உள்ளேயே இருந்தால் ஒன்று அதற்காக கட்டப்படும் premium குறைவு, இன்னொன்று அந்த premium வரிச்சலுகையுடன்  கட்டப்படுகிறது.

சிலர் இந்த ஒரு பயனுக்காகவே குறைந்த balance இருப்புடன் super account வைத்திருக்கலாம்.

இப்பொழுது இந்த superannuation account,ATO-க்கு மாற்றும் பொழுது, இந்த insurance வைத்துக்கொள்ள வாய்ப்பில்லை.

நான் பிறகு வேறு ஒரு superannuation நிறுவனத்துக்கு சென்றோ  அல்லது வேறு ஒரு insurance நிறுவனத்துக்கு சென்று மீண்டும் அந்த insurance எடுக்க வேண்டும் என்றால், ஒருவேளை அதிகமாக premium செலுத்த வேண்டி வரும். ஒருவேளை அவர்கள் என்னுடைய உடல் நிலை பற்றி மருத்துவ பரிசோதனையும் Medical Check-Up கேட்கலாம். ஒருவேளை insurance கிடைக்காமலும் போகலாம். இதுதான் மிகப் பெரிய பாதிப்பு.

இந்த பாதிப்பை எப்படி தவிர்க்கலாம்?

முதலில் ஒருவர் தான் வைத்திருக்கும் super account-இல் எவ்வளவு பணம் இருக்கிறது என்று தெரிந்து கொள்ளவேண்டும்.  அது 6000 டாலருக்கு குறைவாக இருந்தால், அதில் insurance cover இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி, அதை Tax office-க்கு மாற்ற வேண்டாம் என்று அவர் விரும்பினால், அந்த விருப்பத்தை எழுத்து மூலமாக அந்த superannuation நிறுவனத்துக்கு  தெரிவிக்க வேண்டும்.

இதில் முக்கிய விஷயம் என்னவென்றால், இந்த கணிப்பு ஒவ்வொரு வருடமும் ஜூன் மாதத்திலும், டிசம்பர் மாதத்திலும் செய்யவேண்டும்.

காரணம் என்னவென்றால் இந்த ஜூன் மாதத்தில் ஒரு super account-இல் 6000 டாலர்கள் இருக்கலாம்.  அதில் ஒருவர் மேற்கொண்டு பணம் செலுத்தாமல் இருந்தால், அல்லது அந்த முதலீட்டின் வருமானம் அதிகமாக இல்லாமல் இருந்தால், இன்னும் 16 மாதங்களில், அதாவது அடுத்த டிசம்பரில் balance 6000க்கு கீழே போகலாம்.  அப்பொழுது ATO-க்கு மாற்றப்பட்டு விடும்

பொதுவாக சொல்லவேண்டும் என்றால், எந்த ஒரு superannuation account-ஐ குறைந்த பட்சம் 3 மாதத்துக்கு ஒரு முறை இல்லாவிட்டாலும், 6 மாதத்துக்கு ஒரு முறையாவது பார்த்து அதில் எவ்வளவு வருகிறது, பணம் எங்கு போகிறது என்பதை தெரிந்து கொள்வது நல்லது.


Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Watch now