SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக Pop Desi எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
சிட்னி முருகன் குடமுழுக்கு - தமிழில் செய்வதற்கு நிர்வாகம் மறுப்பு!

Sydney Muruhan Temple Maha Kumbabishekam 22 January 2024 Source: Supplied
சிட்னி முருகன் ஆலயத்தின் குடமுழுக்கு(கும்பாபிஷேகம்) இம்மாதம் 22ம் திகதி (22/01/2024) நடைபெறவுள்ளது. தமிழில் குடமுழுக்கு செய்வதற்கான கோரிக்கை நிராகரிக்கப்பட்டமைக்கான காரணம், இந்தியாவிலிருந்து வரவழைக்கப்பட்டுள்ள சிற்பக்கலைஞர்களினால் ஆலயத்தில் புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ள மாற்றங்கள், எண்ணெய்க் காப்பு உட்பட குடமுழுக்கு தொடர்பிலான நிகழ்ச்சிநிரல், வரவழைக்கப்படவுள்ள சிவாச்சாரியார்கள், கலைஞர்கள், ஓதுவார்கள் போன்ற விவரங்கள் மற்றும் வாகனத்தரிப்பிட மாற்றங்கள் போன்றவற்றினை சைவ மன்றத்தின் தலைவர் சபாரட்ணம் கேதாரநாதன் அவர்கள் எம்முடன் பகிர்ந்துகொள்கிறார். நிகழ்ச்சியாக்கம்: மகேஸ்வரன் பிரபாகரன்.
Share



