பொய்யான அல்லது தவறான தகவலை கண்டறிவது எப்படி?

Hao blong faenem mo luk save kiaman nius o storian long Ostrelia

Hao blong faenem mo luk save kiaman nius o storian long Ostrelia Source: iStockphoto / nicoletaionescu/Getty Images

வளர்ந்து வரும் சமூக ஊடக உலகில் தவறான தகவல் அல்லது பொய்யான தகவல் என வேறுபடுத்தி பார்ப்பது சவாலாக உள்ளதாக கூறப்படுகிறது. இதனை எவ்வாறு கண்டறிவது விளக்குகிறது இந்த விவரணம். ஆங்கிலத்தில் Maram Ismail எழுதிய விவரணத்தை தமிழில் தருகிறார் செல்வி.


ஒளியின் வேகத்தில் தகவல் பயணிக்கும் சகாப்தத்தில், உண்மையைப் பொய்யிலிருந்து வேறுபடுத்துவது மிகவும் சவாலானதாகிவிட்டது.

இது தவறான செய்தி, பொய்யான தகவல் என முத்திரை குத்தப்பட்டாலும், தாக்கம் ஒரே மாதிரியாகவே இருக்கும் - கருத்துக்களைத் திசைதிருப்பக்கூடிய, நம்பிக்கைகளை வடிவமைக்கக்கூடிய மற்றும் முக்கியமான முடிவுகளை பாதிக்கக்கூடிய சிதைவை ஏற்படுத்தும் என்பதே யதார்த்தம்.

இன்று, இந்த சிக்கலான தலைப்பை ஆராய்வோம், அதன் தோற்றத்தை வெளிப்படுத்துவோம், தவறான தகவல்களுக்குப் பின்னால் உள்ள வழிமுறை மற்றும் சமூகத்தில் அதன் சாத்தியமான தாக்கத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுவோம்.

வளர்ந்து வரும் டிஜிட்டல் உலகில் தவறான தகவல் ஒரு உண்மையான சவாலை முன்வைக்கிறது. ஆனால் அது சரியாக என்ன சவால்?

RMIT பல்கலைக்கழகத்தில் உள்ள உண்மைச் சரிபார்ப்புப் பிரிவான RMIT Fact Lab-இன் இணை இயக்குநர் Sushi Das.

தவறான தகவல் என்பது பிறரை தவறாக வழிநடத்துவதற்காக மக்கள் வேண்டுமென்றே உருவாக்கும் தவறான தகவல். அவர்கள் இதை நகைச்சுவைக்காகச் செய்யலாம், அல்லது அரசியல் நிகழ்ச்சி நிரலை முன்னிறுத்துவதற்காக இதைச் செய்யலாம் அல்லது எப்படியாவது கிளிக் செய்யவைப்பதன் மூலம் பணம் சம்பாதிக்கலாம் என்பதற்காக அனுப்புகிறார்கள் என்று கூறுகிறார் Sushi Das.
Left to right: Dr Timothy Graham, RMIT FactLab Sushi Das, Dr Darren Coppin.
Left to right: Dr Timothy Graham, RMIT FactLab Sushi Das, Dr Darren Coppin.
Sushi Das மற்றும் அவரது குழுவினர் செய்திகளின் உண்மை தன்மையை சரிப்பார்ப்பவர்கள், தவறான தகவல் அல்லது பொய்யான தகவல்களைக் கொண்ட இடுகைகளைக் கண்டறிய சமூக ஊடகங்களில் வைரலான உள்ளடக்கத்தை மதிப்பாய்வு செய்கின்றனர். அவர்கள் உள்ளடக்கத்தின் துல்லியத்தை சரிபார்க்க முழுமையான ஆராய்ச்சியை மேற்கொள்கின்றனர். இதன் மூலம் துல்லியமான தகவல்கள் பொதுமக்களுடன் பகிரப்படுவது உறுதி செய்யப்படுகிறது.

Ms தாஸ் ஆஸ்திரேலியாவில் தவறான தகவல் மற்றும் பொய்யான தகவல்களின் கலவைகாளை அடையாளம் கண்டுள்ளார். தற்போதைய தலைப்புச் செய்திகள் பெரும்பாலும் சமூக ஊடகங்களில் தவறான தகவல்களைத் தூண்டுவதாக அவர் கூறுகிறார்.

உதாரணத்திற்கு தற்போது நடைபெற்று வரும் உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையேயான போர் மற்றும் இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையேயான போர் பல தவறான மற்றும் பொய்யான செய்திகளை பரப்பி வருவதாக கூறுகிறார் Ms தாஸ்

குயின்ஸ்லாந்து தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் டிஜிட்டல் மீடியாவின் இணைப் பேராசிரியரான டாக்டர் Timothy Graham பணியாற்றுகிறார். தவறான செய்திகள் மற்றும் பொய்யான தகவல்களைப் பரப்புவதில் சமூக ஊடக algorithms வழிமுறைகள் சில சமயங்களில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. சமூக ஊடக தளங்கள் விளம்பரங்களை வழங்குவதற்காக உருவாக்கப்பட்டுள்ளன. பயனர் விருப்பங்களின் அடிப்படையில் உள்ளடக்கத்தைத் வடிவமைக்க அவர்கள் வழிமுறைகளைப் பயன்படுத்துகின்றனர் என்று அவர் கூறுகிறார்.

உண்மையாகவே தவறுகள் செய்வது, பக்கச்சார்பான செய்தி வெளியிடுவது, பரபரப்பு மற்றும் வேண்டுமென்றே அரசியல் நோக்கத்திற்காக , கருத்தியல் அல்லது பொருளாதார கையாளுதல் போன்ற பல்வேறு காரணங்களினால் தவறான தகவல்கள் உருவாகலாம். 

தவறான தகவல்கள் பரந்த அளவிலான தவறான அல்லது பொய்யாக வழிநடத்தும் தகவல்களை உள்ளடக்கியதாக இருக்கலாம் அல்லது சதிகார கூறுகளை உள்ளடக்கியதாக இருக்கலாம்.

எடுத்துக்காட்டாக, RMIT Fact Lab குழு ஒரு சதி கோட்பாட்டை ஆராய்ந்தது, அதில் ஒன்று QR குறியீடுகள் ஆடைகளில் உள்ள tag குறிச்சொற்களுக்கு பதிலாக பயன்பாட்டிற்கு வந்தால் அது தனிநபர்களைக் கண்காணிக்கும் மற்றும் கட்டுப்படுத்தும் முயற்சி என்று ஒரு பொய்யான தகவல் பரவி வந்தது. ஃபேஷன் துறையை சுற்றுச்சூழலுக்கு உகந்ததாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்ட இந்த நடவடிக்கை, உலகப் பொருளாதார மன்றம், வங்கிகள் மற்றும் அரசாங்கத்தால் கண்டுபிடிக்கப்பட்ட திட்டம் என்றும் அந்த பொய் பிரச்சாரம் குற்றம் சாட்டியுள்ளது. இது ஒரு பொய்யான பரப்புரை என்று கூறினார் Ms Das.
Woman scanning a QR code from a label.
A woman is scanning a QR code from a label in a clothing store with her smartphone. Source: iStockphoto / javitrapero/Getty Images/iStockphoto
சிட்னியை தளமாகக் கொண்ட நடத்தை விஞ்ஞானி டாக்டர் Darren Coppin கருத்துப்படி, மொழியின் தொடக்கத்திலிருந்தே தவறான தகவல் பரப்புதல் உருவாகிவிட்டது. இருப்பினும், இது இப்போது குறிப்பிடத்தக்க சமூக தாக்கத்துடன் மிகவும் பொதுவான பிரச்சினையாக உள்ளது. கடந்த காலத்தில், மக்கள் தங்கள் உண்மைகள் மற்றும் நம்பிக்கைகளை அவர்களின் உள்ளூர் சமூகம், குடும்பம் மற்றும் கலாச்சாரத்திலிருந்து பெற்றனர். இப்போதெல்லாம், உலகம் முழுவதிலுமிருந்து பல்வேறு ஆதாரங்களில் இருந்து தகவல்களைப் பெறுகிறோம். 

மனிதர்கள் ஏன் தவறான செய்திகளை பரப்ப முடியும் என்பதற்கு நான்கு காரணங்களை டாக்டர் Coppin அடையாளம் காட்டுகிறார். நமது பாதுகாப்பு , கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க வேண்டும் என்று எண்ணம் போன்றவையே காரணமாகும் என்கிறார் டாக்டர் Coppin.
Puzzled Businesswoman reading a Text Message on her Smartphone
Misinformation can come from various sources, such as genuine mistakes, biased reporting, sensationalism, and intentional political, ideological, or economic manipulation. Source: iStockphoto / nicoletaionescu/Getty Images

ஒரு விடயம் குறித்த நமது சார்பு நிலை மற்றும் தவறான செய்திகளை உருவாக்கப் பயன்படுத்தப்படும் தொழில்நுட்பம் போன்ற காரணங்களினால் தவறான செய்திகள் அல்லது பொய்யான தகவல்களின் மீது நாம் ஈர்க்கப்படுகிறோம்.

தற்காலத்தில் தவறான தகவல்கள் பரவி வரும் நிலையில், செய்திகளைக் கண்டறிந்து சரிபார்க்கும் திறன்களை வளர்த்துக்கொள்வது மிக முக்கியமானது.

எனவே, உண்மையான செய்திகளை தவறான செய்திகளிலிருந்து வேறுபடுத்துவதற்கான தனது சிறந்த உத்தியைப் பகிர்ந்து கொள்கிறார் சுஷி தாஸ். எதையும் எடுத்தவுடன் நம்பிவிட வேண்டாம் இணையத்தில் உள்ள பல நம்பகமான வழிமுறைகள் கொண்டு ஆராயுங்கள் என்று கூறுகிறார் சுஷி தாஸ்.

அதேபோன்று சமூக ஊடகங்களில் வரும் தகவல்களை மற்றவர்களுடன் பகிர்வதற்குமுன் நன்றாக யோசியுங்கள் என்று அறிவுரை கூறுகிறார் Dr Coppin

தவறான தகவல்களின் இன்றைய உலகில், சரியாக தகவல்களைத் தெரிந்துகொள்வது இன்றியமையாதது. ஆனால் தவறான அல்லது பொய்யான தகவல்களை நம்பும்படி உருவாக்குவதற்கு தற்போதைய Artificial Intelligence செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. இதனை தான் பெரிய சவாலாக பார்ப்பதாக பேராசிரியர் Timothy Graham கூறுகிறார்.

Ol yangfala oli stap yusum phone blong olgeta long wan bikfala city
Experts believe the challenges of combating misinformation is set to grow with AI. Credit: We Are/Getty Images




SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக Pop Desi எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Share
Follow SBS Tamil

Download our apps
SBS Audio
SBS On Demand

Listen to our podcasts
Independent news and stories connecting you to life in Australia and Tamil-speaking Australians.
Ease into the English language and Australian culture. We make learning English convenient, fun and practical.
Get the latest with our exclusive in-language podcasts on your favourite podcast apps.

Watch on SBS
Tamil News

Tamil News

Watch in onDemand