புகலிடம் கோரி ஆஸ்திரேலியா வந்த குடும்பத்தின் கதி

Priya, Nades and their Australian born daughters Source: Supplied
மெல்பேர்ன் தடுப்புமுகாமில் கடந்த 9 மாதங்களுக்கும் மேலாகத் தங்க வைக்கப்பட்டுள்ள தமிழ் புகலிடக்கோரிக்கையாளர்களான நடேசலிங்கம்-பிரியா குடும்பம் தம்மை ஆஸ்திரேலியாவில் வாழ அனுமதிக்குமாறு கோரி தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனு பெடரல் நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டுள்ளது. அத்துடன், நடேசலிங்கம்-பிரியா குடும்பத்தை நாடுகடத்துவதை அடுத்த ஆண்டு பெப்ரவரி 1ம் திகதி வரை பிற்போடுமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. என்ன நடந்தது, இனி என்ன நடக்கலாம்? இந்தக் குடும்ப நண்பர் ஒருவர் மற்றும் அகதிகளுக்காகக் குரல் கொடுப்பவர் ஆகியோரின் கருத்துகளுடன் நிகழ்ச்சி படைக்கிறார் குலசேகரம் சஞ்சயன்.
Share



