“சிங்கப்பூர் தமிழர்களின் அடையாளம் கலப்பு அடையாளம்”

Source: Malini Radakrishna
சிங்கப்பூரின் தமிழ் ஊடகவியலாளர்கள் குறித்து Auckland University of Technology எனும் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டத்திற்கான ஆய்வை நிறைவு செய்துள்ளார் மாலினி ராதாகிருஷ்ணா அவர்கள். சிங்கப்பூர் தமிழ் ஊடவியலாளரான மாலினி அவர்கள் பல ஆண்டுகள் பல நாடுகளில் ஊடகங்களில் பணியாற்றியவர். குறிப்பாக, சிங்கப்பூரின் வசந்தம் தொலைக்காட்சி, ஒலி 96.8FM, தமிழ் முரசு இதழ், தமிழ்நாட்டின் Sun Music, Jaya TV, Vasanth TV, Vijay TV & Aha FM, இலங்கையின் Swarna Oli102.2FM என்று அவரின் பணி விரிகிறது. சிங்கப்பூர் தமிழ் ஊடகவியலார்களின் இன மொழி அடையாளங்கள், ஊடவியலாளர்கள் சந்திக்கும் சவால்கள், அவர்களின் எதிர்காலம் என்று பல அம்சங்கள் குறித்து நம்முடன் மனம் திறந்து உரையாடுகிறார் மாலினி அவர்கள். மாலினி அவர்களோடு உரையாடியவர்: றைசெல். நேர்முகத்தின் பாகம்: 1
Share




