இலங்கை அரசின் அச்சுறுத்தல்கள் மற்றும் சவால்களுக்கு மத்தியிலும், நாட்டின் ஓரங்கட்டப்பட்ட மற்றும் பாதிக்கப்படக்கூடிய சமூகங்களின் உரிமைகளுக்காகத் தொடர்ந்து போராடி வரும் ஒரு வழக்குரைஞர் என்று ரனிதாவின் சாதனைகள் குறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை விவரித்துள்ளது.
அமெரிக்க வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், “ரனிதா தனது வாழ்க்கையை பொறுப்புணர்வு மற்றும் நீதிக்காக அர்ப்பணித்துள்ளார்; இலங்கையின் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் பல ஆண்டுகளாக குற்றச்சாட்டு இன்றி தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களுக்கு இலவச சட்ட உதவி மற்றும் தொடர்புடைய சேவைகளை வழங்கி வருகிறார். பாதிக்கப்பட்டவர்களுடனும் அவர்களது குடும்பத்தினருடனும் பணியாற்றிய அவரது விரிவான அனுபவத்தின் அடிப்படையில், குறிப்பாக இலங்கையின் மிகவும் பாதிக்கப்படக்கூடிய மக்களுக்காக, நீதி மற்றும் பொறுப்புக்கூறலுக்கான செயற்பாட்டை மிகுந்த ஆர்வத்துடனும் அர்ப்பணிப்புடனும் ரனிதா செய்து வருகிறார்” என்று கூறியுள்ளது.
ரனிதா ஞானராஜாவின் செயற்பாடுகள் குறித்து மேலும் அறிந்து கொள்ள, அவருடன் உரையாடுகிறார் குலசேகரம் சஞ்சயன்.