spk_0
நீங்கள் எஸ்பிஎஸ் தமிழோடு இணைந்துள்ளீர்கள்.bs.com.au/ தமிழ் எனும் இணையத்தின் மூலம் மேலும் பல சிறப்பான நிகழ்ச்சிகளை நீங்கள்
spk_1
தமிழகத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் தமிழக தேர்தல் களம் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. தமிழக தேர்தல் கள நிலவரம் குறித்த செய்தியின் பின்னணி.
spk_1
வருகின்ற ஏப்ரல் மாதம் 23ஆம் தேதி தமிழகத்தில் ஒரே கட்டமாக 234 தொகுதிகளுக்கும் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது.
spk_1
2026ஆம் ஆண்டின் தமிழக சட்டமன்ற தேர்தல் தமிழக அரசியலில் முக்கிய திருப்பமாக பார்க்கப்படுகிறது. ஆளும் திராவிட முன்னேற்ற கழகம் தலைமையிலான கூட்டணி தனது ஆட்சியை தொடர முயற்சி செய்து வருகிறது. அதே நேரத்தில் அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் தலைமையிலான எதிர்க்கட்சிகள் மீண்டும் ஆட்சியை பிடிக்க போராடுகின்றன. இந்த முறை தேர்தலில் புதிய மாற்ற சக்திகளாக.
spk_1
தமிழக வெற்றி கழகம் மற்றும் நாம் தமிழ் கட்சி போன்ற கட்சியில் முக்கிய பங்கு வகிப்பதாக பார்க்க படுகிறது. இதனால் வழக்கமாக இரு கட்சி போட்டி மாறி பல்முனை போட்டி ஏற்பட்டுள்ளது. இதனால் தமிழக சட்டமன்ற தேர்தல் களம் கடுமையான அரசியல் போட்டியாக மாறியுள்ளது. நலத்திட்டங்கள், வேலைவாய்ப்பு மற்றும் விலைவாசி உயர்வு போன்ற பிரச்சினைகள் இந்த தேர்தலில்
spk_1
முக்கிய அம்சங்களாக பார்க்கப்படுகின்றன. திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி தலைவர்கள் திமுக ஆட்சியின் ஐந்து வருட சாதனைகளை பட்டியலிட்டு தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதே நேரம் விலைவாசி உயர்வு, வேலையின்மை மற்றும் சட்டம் ஒழுங்கு குறித்த பிரச்சனைகளை முன்வைத்து எதிர்க்கட்சி தலைவர்களும் தீவிர பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகின்றனர். தேர்தலுக்கு இன்னும் சில வாரங்களே
spk_1
உள்ளதால் அனைத்து கட்சி அரசியல் தலைவர்களும் சூறாவளி பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகின்றனர். திமுக இந்த சட்டமன்ற தேர்தலில் 164 தொகுதிகளில் களமிறங்குகிறது. தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் போட்டியிடுகிறார். கடந்த சில தேர்தல்களில் கொளத்தூர் தொகுதியில் தான் முக ஸ்டாலின் போட்டியிட்டு வெற்றி பெற்றார் என்பதும் நோக்கத்தக்க
spk_1
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சேப்பாக்கம் தொகுதியில் களமிறங்குகிறார். தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தமிழகம் முழுவதும் சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அதிமுக மற்றும் மத்தியில் ஆட்சி செய்யும் பாஜக ஆகிய கட்சிகளை மிக கடுமையாக விமர்சித்து வருகிறார் முக ஸ்டாலின் வாஜ்பாய் தலைமையிலான
spk_2
பாஜக அரசோட கடிவாளத்தை கலைஞர் கையில வச்சிருந்தார்.
spk_2
ஆனா இப்போ அதிமுக மட்டுமல்ல என்டிவி இணைஞ்சக்கக்கூடிய அத்தனை ஊழல் கட்சிகளின் குடிமைப்படியும் அமித்ஷா கிட்ட தான் இருக்கு. நாங்க கூட்டணி வச்சப்போ தமிழ்நாட்டிற்கான வளர்ச்சித் திட்டங்களை கொண்டு வந்தோம். ஆனா பழனிச்சாமி கூட்டணி வச்சு நீட்டின இடத்தெல்லாம் கையெழுத்து போட்டு தமிழ்நாட்டு உரிமைகளை அடகு வச்சுதான் அமைச்சோம். இந்த லட்சணத்துல ஊருக்கே தெரிஞ்ச நியூஸ் அந்த போட்டோவை கொண்டு வந்து
spk_2
இம்சை அரசன் 23ம் புலிகேசி படத்தில் சொல்ற மாதிரி மணிக்கு ஒரு முறை தான் ஒரு ஒரு மங்கினி என்பதை நிரூபிச்சிட்டு
spk_1
இருக்கிறார். திமுகவின் கூட்டணி கட்சி தலைவர்களும் சூறாவளி பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
spk_1
திமுக கூட்டணியில் இருக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாளவன் தற்போது நாடாளுமன்ற உறுப்பினராக உள்ளார். திடீர் திருப்பமாக திருமாவளவன் இந்த சட்டமன்ற தேர்தலில் போட்டியிட உள்ளார். காட்டுமன்னார் கோவிலில் திருமாவளவன் போட்டியிட உள்ளார். தமிழக சட்டமன்றம் தான் தமிழக அரசியலுக்கான முகம் என்று தெரிவித்துள்ளார் திருமாவளவன்.
spk_3
சட்டமன்ற உறுப்பினராக இருந்திருக்கிறேன். இரண்டேக ஆண்டுகளில் அந்த பதவியை திறந்திருக்கிறேன். அதன் பின்னர் நான் சட்டப்பேரவை பொதுத்தேர்தல்களில் பங்கேற்றதில்லை. சட்டப்பேரவையில் இருந்து பணியாற்ற வேண்டும் என்ற வேட்கை நீண்ட நாட்களாக உண்டு. தமிழ்நாடு சட்டமன்றம் தான் தமிழ்நாடு அரசியலுக்கான ஒரு முகம். என்னதான் நாடாளுமன்றத்திலே நாம் குரல் கொடுத்தாலும், தேசிய அளவிலான பிரச்சினைகள் குறித்து பேசினார்.
spk_3
தமிழ்நாடு சட்டமன்றத்தில் தமிழ்நாட்டு அரசியல் குறித்து, விளிம்புநிலை மக்களின் பிரச்சினைகள் குறித்து வலுவாக பேசுவதற்கு ஒரு வாய்ப்பாக அமையும் என்ற அடிப்படையில்தான் நான் இந்த தேர்தலில் போட்டியிடுவது என்று முடிவெடுத்திருக்கிறேன்.
spk_1
திமுக, காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் திமுக அரசின் 5 ஆண்டு சாதனைகளை சொல்லியும் மத்திய பாஜக.
spk_1
அரசு மீது கடுமையான குற்றச்சாட்டுக்களை முன்வைத்தும் பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகின்றன. இதே நேரம் இந்த தேர்தலில் 169 இடங்களில் அதிமுக போட்டியிடுகிறது. அதிமுகவின் கூட்டணி கட்சிகளான பாஜக 27 இடங்களிலும், பாட்டாளி மக்கள் கட்சி 18 இடங்களிலும், அமமுக கட்சி 11 இடங்களிலும் போட்டியிடுகின்றன.
spk_1
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியும் தமிழகம் முழுவதும் சூறாவளி பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகிறார். ஆளும் திமுக அரசு மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்து பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகிறார் எடப்பாடி பழனிச்சாமி.
spk_4
உங்களுடைய அப்பா திரு. கருணாநிதி அவர்கள் சங்கியா வெச்சுக்கிறாரா? இது யாரோட இருக்கிறாரு யாரோ?
spk_4
திரு. வாஜ்பாயோட தானே இருக்கிறார். மாமா, திரு. முரசொலி மாறன் அவர் யாரோட இருக்காரு அப்ப திரு. கருணாநிதி சங்கியா முரசொலி மாறன் சங்கியா அவர் ஒத்துக்கிறார். ஸ்டாலின் ஒத்துக்கிறார்.
spk_1
அதிமுக கூட்டணியின் முக்கிய கட்சிகளில் ஒன்றாக பார்க்கப்படும் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவரான அன்புமணி ராமதாசும் தீவிர தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார். ஆளும் திமுக அரசு மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகிறார்.
spk_1
அன்புமணி ராமதாஸ் கடந்த
spk_5
தேர்தலில் திமுக ஆட்சி வருவதற்கு முன்பு தமிழக மக்களுக்கு கொடுத்த 505 வாக்குறுதிகள், அதில் வெறும் 13 வாக்குறுதிகள் அதாவது 66 வாக்குறுதிகளை மட்டும்தான் முழுமையாக நிறைவேற்றியிருக்கின்றார்கள். அதில் திமுக படுதோல்வி அடைந்திருக்கிறது. அதாவது தமிழ்நாட்டு மக்களுக்கு திமுக நம்பிக்கை துரோகம்
spk_1
கூட்டணியும் வைக்காமல் நாம் தமிழர் கட்சி தனித்து களமிறங்குகிறது. இந்த தேர்தலுக்காக நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் தமிழகம் முழுவதும் சூறாவளி பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகிறார். தேர்தல் பிரச்சாரங்களில் திமுக, அதிமுக, பாஜக மற்றும் விஜயின் தாவக ஆகிய அனைத்து கட்சிகளையும் கடுமையாக விமர்சித்து வருகிறார் சீமான்.
spk_6
மக்களின் பிரச்சனையை மனதிலிருந்து பேச தெரியால.
spk_6
படிக்கிறவனை தலைவனை நம்பிவிட்டு திரிகிறாய் டேய் உன் பிரச்சனையே இதயத்தில் இருந்து பேச தெரியாதவனே இந்த நாட்டை ஒப்படைக்க என்று துடிக்கிறாயே. உன்னை என்ன செய்யலாம். ஒன்று என்னை சாப்பிட கூட்டிட்டு போய் சோற்றில் வைத்து வைத்து கொன்று கொன்று நிம்மதியாக என்னை சாகவிட்டு. இல்லையென்றால் நாட்டை கொடுத்துவிட்டு வாழப்பார். என்னத்தையாவது உருப்படியாக முடிவடி கத்தி கத்தி சாக விடாதே. 15 ஆண்டு கத்தி விட்டேன். என் பாவமே உன்னை சும்மா விடாது. வைத்தியக்காரன், பைத்தியக்காரன் எத்தனை ஆண்டு கத்துவது எத்தனை
spk_1
ஆண்டு நாம் தமிழர் கட்சி போலவே இந்த தேதிலே.
spk_1
நடிகர் விஜயின் தவேகாவும் அனைத்து தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுகிறது. நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் சென்னையில் உள்ள பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு என்று இரண்டு தொகுதியில் தவேக தலைவர் விஜய் போட்டியிடுகிறார். முன்னதாக வேட்புமனு தாக்கல் தொடங்கிய முதல் நாளே விஜய் பெரம்பூர் தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்ததும் நோக்கத்தக்கது. கடந்த 2ஆம் தேதி திருச்சி கிழக்கு தொகுதியில்.
spk_1
தனது இரண்டாவது வேட்பு மனுவை தாக்கல் செய்தார் விஜய். திருச்சியில் வேட்பு மனுவை தாக்கல் செய்த பின் வானில் இருந்தபடியே பிரச்சாரத்தில் ஈடுபட்டார் விஜய். தனது பிரச்சாரங்களில் ஆளும் திமுக அரசு மீதும், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மீதும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து பேசி வருகிறார் விஜய். இங்க
spk_7
ஒரு மந்திரி இருக்கிறார் நகராட்சி துறையில வேலை வாங்கி தரதா சொல்லி கோடிக்கணக்கான பணத்தை லஞ்சமா வாங்கிக்கிட்டு
spk_7
தகுதியானவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்காத அளவுக்கு பண்ணியிருக்கிறார். இதெல்லாம் எவ்வளவு பெரிய ஒரு ஏமாத்து வேலை. அதனால நம்ம தம்பி தங்கைகளே உங்களுக்கு இந்த வேலை வாய்ப்பை பதித்த இந்த ஸ்டாலின் சார் சர்க்காரை என்ன பண்ணலாம் தூக்கி வீசி எறிவோமா? உங்களுக்கு இந்த பாதுகாப்பு இல்லாத சட்டம் ஒழுங்கு சரியில்லாத இந்த தீயசக்தி திமுக அரசை என்ன பண்ணலாம் தூக்கி வீசி எறிவோமா? நகராட்சி துறையில மட்டுமே ₹1000 கோடிக்கு மேல ஊழல்னா அப்ப மத்த துறையில.
spk_7
கணக்கு போட்டு பாருங்க தலையெல்லாம் சுத்தி போயிடும்.
spk_1
இதேபோல் காங்கிரஸ் கட்சியின் தலைவர் செல்வப் பெருந்தகை, பாஜகவின் தமிழக தலைவர் நயினார் நாகேந்திரன், பாஜகவின் தமிழகத்தின் முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேமுதிக தலைவர் பிரேமலதா விஜயகாந்த் மற்றும் அமமுக தலைவர் டிடிவி தினகரன் ஆகியோரும் தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இது எஸ்பிஎஸ் வானொலியின் தமிழ் ஒலிபரப்பின் தமிழக செய்தியாளர் ராஜ்.
spk_0
பகிர்வு, கருத்து பதிவு லைக், ஷேர் கமெண்ட் எஸ்பிஎஸ் தமிழின் பேஸ்புக்.
END OF TRANSCRIPT