அமெரிக்கா உங்களை மோப்பம் பார்ப்பதற்கு, Telstra உடந்தை‼?
Cables
அமெரிக்கப் புலனாய்வுத் துறையின் வேண்டுகோளின் பேரில், Telstra அமைப்பு மின்னஞ்சல்களையும், தொலைபேசி உரையாடல்களையும் பதிவு செய்ய உடன்பட்டிருக்கிறது என்று அண்மையில் செய்திகள் வெளியாகியதைத் தொடர்ந்து, ஆஸ்திரேலிய அரசும் அதன் புலன் விசாரணை அமைப்புகளும் சட்ட ஒழுங்கிலிருந்து விலகுகிறதா என்று கண்காணிக்க வேண்டும் என்ற அறைகூவல் கிளப்பப்பட்டிருக்கிறது.2001ம் ஆண்டு செப்டம்பர் 11ல் நியூயோர்க் நகரில் நிகழ்ந்த பயங்கரவாதத் தாக்குதல் நடந்த சில மாதங்களுக்குப் பின்னர், அமெரிக்கப் புலனாய்வுத்துறையுடன் Telstra இந்த உடன்படிக்கையைச் செய்திருக்கிறது.அமெரிக்கத் தகவல் தொழில்நுட்ப இரகசியங்களை அம்பலப்படுத்தியுள்ள Edward Snowden கசிந்துள்ள தகவலின்படி, Telstra போன்ற பல சர்வதேச அமைப்புகளின் உதவியுடன், அமெரிக்கா உலகலாவியரீதியில் பல தரவுகளை ஒட்டுக்கேட்க முடியும்.இது பற்றி SBS செய்திப்பிரிவைச் >சுர்ந்த Greg Dyett தயாரித்த விவரணத்தைத் தமிழில் தருகிறார், குலசேகரம் சஞ்சயன்.
Share