தமிழ்த் தடம்: ஜீவா
Jeeva Source: Jeeva
ப. ஜீவானந்தம் (ஆகஸ்ட் 21, 1907 - ஜனவரி 18, 1963) ஏறத்தாழ நாற்பது ஆண்டுகள் பொது வாழ்க்கையில் ஈடுபட்டு தியாகங்கள் பல புரிந்த பொதுவுடமைத் தலைவர் ஆவார். ஏறத்தாழ பத்து ஆண்டுகளை சிறையில் கழித்தவர். காந்தியவாதியாக, சுயமரியாதை இயக்க வீரராக, தமிழ்ப் பற்றாளராக, அனைத்திற்கும் மேலாக ஒரு பொதுவுடைமை இயக்கத் தலைவராக படிப்படியாக உயர்ந்தவர். தம்மை நாத்திகராக அறிவித்துக் கொண்டவர். ஜீவா எனும் பெரும் ஆளுமை குறித்த தமிழ்த் தடம் நிகழ்ச்சியை முன்வைக்கிறார் செல்வி அவர்கள்.
Share



