“நாங்கள் தொடர்ந்து பிச்சைக்காரர்களாக வாழவே இந்தியா விரும்புகிறதா?” -இலங்கைத் தமிழ் அகதிகள்

Source: Maga.Tamizh Prabhagaran
தமிழ்நாட்டில் சுமார் ஒரு லட்சம் இலங்கைத் தமிழ் அகதிகள் உள்ளனர். 107 அகதி முகாம்களில் 61,422 பேரும் 35,316 பேர் அகதிகள் முகாம்களுக்கு வெளியேயும் தங்கியுள்ளனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் இந்துக்கள். ஆனால் இந்திய அரசு நடைமுறைப்படுத்தும் குடியுரிமைச்சட்டத்தில் இந்த மக்கள் சேர்க்கப்படவில்லை. இது குறித்து இந்த மக்கள் என்ன நினைக்கின்றனர்? அகதி முகாம்களுக்குச் சென்று அவர்களின் கருத்துக்களைத் தொகுத்து SBS தமிழ் ஒலிபரப்பிற்காக முன்வைக்கிறார் சுயாதீனமான ஊடகவியலாளர் மகா.தமிழ்ப் பிரபாகரன். தயாரிப்பு: றைசெல்.
Share