தமிழ் அகதிகள் சிகரம் தொட்ட கதை.
Ratheesan Yoganathan Source: SBS
Lebara எனும் மிகப் பெரிய சர்வதேச ஸ்தாபனத்தின் நிறுவுனர்களான Ratheesan Yoganathan, Rasiah Ranjith Leon மற்றும் Baskaran Kandiah ஆகிய மூன்று நண்பர்களும் ஈழத்திலிருந்து அகதிகளாக வெளியேறிய தமிழர்கள். இன்று இவர்களின் வளர்ச்சியை உலகமே வியந்து பார்க்கிறது. கடந்த வாரம் சிட்னியிலுள்ள Opera House இல், Lebara நிறுவனம் தனது Lebara Play எனும் புதிய பொழுதுபோக்கு சாதனத்தை வெளியிட்டு வைத்தது. இந்நிகழ்வுக்கு Ratheesan மற்றும் Leon ஆகியோர் ஐரோப்பாவிலிருந்து வருகை தந்திருந்தனர். அதன்போது Lebara வின் வளர்ச்சி, தமது வெற்றியின் பின்னணி மற்றும் தமது வளர்ச்சி எப்படி சாத்தியமானது எனப் பல விடயங்களை Ratheesan அவர்கள் மகேஸ்வரன் பிரபாகரனுடன் பகிர்ந்து கொண்டார் . செவ்வி ஏற்பாடு: சுதர்ஷன் அருந்தவநாதன் மற்றும் மஜிந்த வீரசேகர.
Share