கொஞ்சம் மொழிகள்... கூடவே பைலா ! – பாகம் 2

Dr. Mahesh Radhakrishnan during a research session Source: Supplied
இலங்கையில் இன்றும் போர்த்துக்கீசிய மொழி பேசும் மக்கள் தம் கலாச்சார அடையாளத்தோடு வாழ்கிறார்கள். அவர்களது மொழி, பேசும் கலாச்சாரம், மற்றும் வெளிப்படையான வாழ்க்கை முறைகளை ஆவணப்படுத்தும் திட்டத்தில் முனைவர் மகேஷ் ராதாகிருஷ்ணன் ஈடுபட்டிருந்தார். இலங்கையின் கிழக்கிலும் மற்றும் வடக்கிலும், குறிப்பாக மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை மற்றும் யாழ்ப்பாண மாவட்டங்களிலுள்ள போர்த்துகீசிய சமூகங்களில் அவரது ஆராய்ச்சிகள் கவனம் செலுத்துகின்றன. இரு பகுதிகளாக பதிவாகியுள்ள நேர்காணலின் இறுதிப் பாகத்தில், இலங்கை போர்த்துக்கீசியரின் தற்போதைய வாழ்க்கை முறை குறித்தும், தனது எதிர்கால வேலைத்திட்டங்கள் குறித்தும் டாக்டர் மகேஷ் ராதாகிருஷ்ணன் குலசேகரம் சஞ்சயனுடன் பேசுகிறார். இந்த ஆய்வு குறித்த மேலதிக விபரங்களை https://elar.soas.ac.uk/Collection/MPI1035102#items என்ற இணையத்தில் காணலாம்.
Share




