இன்றைய செய்திகள்: 20 மார்ச் 2026 - வெள்ளிக்கிழமை

JIM CHALMERS PRE BUDGET ADDRESS

Federal Treasurer Jim Chalmers speaks a pre budget address at the Ritz-Carlton in Melbourne, Thursday, March 19, 2026. Dr Chalmers addresses key forces shaping the fiscal agenda. (AAP Image/Joel Carrett) NO ARCHIVING Source: AAP / JOEL CARRETT/AAPIMAGE

SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வெள்ளிக்கிழமை 20/03/2026) செய்திகள். வாசித்தவர் : செல்வி இன்பசேகரன்.


This podcast has been transcripted using AI

SBS தமிழின் ஏனைய நிகழ்ச்சிகளைக் கேட்க எமது podcast பக்கத்திற்குச் செல்லுங்கள். SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக SBS South Asian எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tunein பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலி யில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள். SBS South Asian YouTube channel ஊடாக எமது podcasts மற்றும் videos-ஐப் பார்வையிடுங்கள்.


Today's highlights ( 20 March 2026 - Friday)


To hear more podcasts from SBS Tamil, subscribe to our podcastcollection. Listen to SBS Tamil at 12 noon on SBS South Asian channel on Mondays, Wednesdays, Thursdays and Fridays & 8pm on Mondays, Wednesdays, Fridays and Sundays on SBS Radio 2. Find your area’s radio frequency by visiting our tune in page. For listening on DAB+ digital radio, search for ‘SBS Radio’. On SBS South Asian YouTube channel, follow SBS Tamil podcasts and videos. You can also enjoy programs in 10 South Asian languages, plus SBS Spice content in English. It is also available on SBS On Demand.

spk_0

நீங்கள் எஸ்பிஎஸ் தமிழோடு இணைந்துள்ளீர்கள்.bs.com.au/ தமிழ் எனும் இணையத்தின் மூலம் மேலும் பல சிறப்பான நிகழ்ச்சிகளை நீங்கள்

spk_1

கேட்கலாம்.

spk_1

நேயர்கள் அனைவருக்கும் வணக்கம். இன்று மார்ச் மாதம் 20ஆம் தேதி வெள்ளிக்கிழமை எஸ்பிஎஸ் தமிழ் ஒலிபரப்பு வழங்கும் செய்திகள் வாசிப்பவர் செல்வி இன்பசேகரன்.

spk_1

அடுத்த பெடரல் நிதிநிலை அறிக்கையில் முக்கியமான வரி சீர்திருத்தங்கள் அறிவிக்கப்படலாம் என்று டிரஷரர் கருவூல காப்பாளர் ஜிம் தாமஸ் தெரிவித்துள்ளார். தனது ஐந்தாவது நிதிநிலை அறிக்கையில், செலவு கட்டுப்பாட்டுத் திட்டங்கள், உற்பத்தி திறனை உயர்த்தும் நடவடிக்கைகள், முதலீட்டை ஊக்குவிக்கும் திட்டங்கள் மற்றும் புதிய வரி மாற்றங்கள்.

spk_1

உள்ளடக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார். மத்திய கிழக்கில் நடைபெறும் போர் ஆஸ்திரேலிய பொருளாதாரத்திற்கு புதிய அழுத்தங்களை ஏற்படுத்தி வருவதாகவும், அதன் தாக்கம் வரவிருக்கும் நிதிநிலை அறிக்கையில் பிரதிபலிக்கும் எனவும் ஜிம் தாமஸ் எச்சரித்தார்.

spk_1

ஆஸ்திரேலியாவின் நுகர்வோர் கண்காணிப்பு அமைப்பு, எரிபொருள் சந்தையில் நிலவும் போட்டியை பாதிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக எழுந்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக நாட்டின் முக்கிய எரிபொருள் வழங்குநர்கள் மீது விசாரணையை தொடங்கியுள்ளது.

spk_1

ஆஸ்திரேலிய போட்டி மற்றும் நுகர்வோர் ஆணையம் ஏசி, அம்போல், பிபி, ஆஸ்திரேலியா, மொபைல் உள்ளிட்ட நிறுவனங்களின் நடவடிக்கைகளை ஆய்வு செய்யவுள்ளது. குறிப்பாக பிராந்திய மற்றும் கிராமப்புற சமூகங்களுக்கு சேவை செய்யும் விநியோகத்தர்களுக்கான டீசல், எரிபொருள் விநியோகம் தொடர்பான புகார்களை அடிப்படையாகக் கொண்டு இந்த விசாரணை மேற்கொள்ளப்படும்.

spk_1

பிப்ரவரி மாதத்தில் சுமார் 50, 000 ஆஸ்திரேலியர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகள் கிடைத்திருந்த போதிலும், ஆஸ்திரேலியாவின் வேலையற்றோர் விகிதம் 4.3% ஆக உயர்ந்துள்ளது. ஆஸ்திரேலிய புள்ளி விவரத் துறையின் சமீபத்திய தொழிலாளர் சந்தை தரவுகளின்படி, கடந்த மாதத்தில் வேலையற்றோரின் எண்ணிக்கை 35, 000 ஆக அதிகரித்துள்ளது.

spk_1

ஆஸ்திரேலியாவின் எரிபொருள் விநியோகம் பாதுகாப்பாக இருப்பதாக பிரதமர் ஆண்டனி அல்பனி தெரிவித்துள்ளார். இருப்பினும் நாட்டின் எரிபொருள் பற்றாக்குறையை நிர்வகிப்பதில் ஆஸ்திரேலியா அதிகப்படியான தயார் நிலையுடன் இருக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். புதிய எரிபொருள் விநியோகப் பணிக்குழுவின் ஒருங்கிணைப்பாளராக ஆஸ்திரேலிய எரிசக்தி ஒழுங்குமுறை ஆணையத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி.

spk_1

ஆ ஹாரிஸை நியமிப்பதாக பிரதமர் மத்திய கிழக்கின் நிலைமை மாற்றமடைந்து வரும் சூழலில் முயற்சிகளை ஒருங்கிணைப்பதற்காக ஒவ்வொரு மாநிலமும் மற்றும் பிரதேசமும் ஆந்தியா ஹாரிசுடன் இணைந்து பணியாற்ற ஒரு பிரதிநிதியை நியமிக்கும் என்றும் பிரதமர் ஆண்டனி அல்பனிசி தெரிவித்துள்ளார்.

spk_2

ஈரானின்

spk_1

ஏவுகணை தாக்குதல் இஸ்ரேலின் வடக்கு துறைமுக நகரான ஹைஃபாவில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களை தாக்கியுள்ளது. இஸ்ரேலின் மூன்றாவது.

spk_1

பெரிய நகரமான ஹைஃபா மற்றும் நாட்டின் தெற்கு பகுதியில் உள்ள ஆஷ்டா நகரங்களில் உள்ள சுத்திகரிப்பு நிலையங்களை இலக்காக கொண்டதாகவும், மேலும் பல பாதுகாப்பு இலக்குகள் மற்றும் ராணுவ ஆதரவு மையங்களையும் தாக்கியதாக ஈரானின் இஸ்லாமிய புரட்சி காவல்படை உறுதிப்படுத்தியுள்ளது.

spk_1

மத்திய கிழக்கில் நடைபெறும் போர் மேலும் சர்வதேச அளவில் அதிர்ச்சிகளை ஏற்படுத்தி, அவை ஆஸ்திரேலிய பொருளாதாரத்தையும் பாதிக்கக்கூடும் என்று ஆஸ்திரேலிய ரிசர்வ் வங்கி தனது அரையாண்டு நிதி நிலைத்தன்மை அறிக்கையை வெளியிட்டு எச்சரித்துள்ளது.

spk_1

இத்துடன் எஸ். பி.எஸ் தமிழ் ஒலிபரப்பின் செய்திகள் நிறைவு பெறுகின்றன.

spk_1

விருப்பம்,

spk_0

பகிர்வு, கருத்து பதிவு லைக், ஷேர் கமெண்ட் எஸ்பிஎஸ் தமிழின் பேஸ்புக்.

END OF TRANSCRIPT

Share

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Watch now