இன்றைய செய்திகள்: 10 ஏப்ரல் 2026 - வெள்ளிக்கிழமை

ANTHONY ALBANESE SYDNEY DEPARTURE

Australian Prime Minister Anthony Albanese boards a plane as he departs for an official visit to Singapore at Sydney Airport, Sydney, Thursday, April 9, 2026. (AAP Image/Lukas Coch) NO ARCHIVING Source: AAP / LUKAS COCH/AAPIMAGE

SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வெள்ளிக்கிழமை 10/04/2026) செய்திகள். வாசித்தவர் குலசேகரம் சஞ்சயன்.


This podcast has been transcripted using AI


SBS தமிழின் ஏனைய நிகழ்ச்சிகளைக் கேட்க எமது podcast பக்கத்திற்குச் செல்லுங்கள்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக SBS South Asian எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்து கொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள். SBS South Asian YouTube channel ஊடாக எமது podcasts மற்றும் videos-ஐப் பார்வையிடுங்கள்.


Today's highlights (10 April 2026 - Friday)


To hear more podcasts from SBS Tamil, subscribe to our podcast collection.

Listen to SBS Tamil at 12 noon on SBS South Asian channel on Mondays, Wednesdays, Thursdays and Fridays & 8pm on Mondays, Wednesdays, Fridays and Sundays on SBS Radio 2. Find your area’s radio frequency by visiting our tune in page. For listening on DAB+ digital radio, search for ‘SBS Radio’. On SBS South Asian YouTube channel, follow SBS Tamil podcasts and videos. You can also enjoy programs in 10 South Asian languages, plus SBS Spice content in English. It is also available on SBS On Demand


spk_0

நீங்கள் எஸ்பிஎஸ் தமிழோடு இணைந்துள்ளீர்கள்.

spk_1

நேயர்களுக்கு வணக்கம். இன்று ஏப்ரல் மாதம் 10ஆம் தேதி வெள்ளிக்கிழமை. எஸ்பிஎஸ் தமிழ் ஒலிபரப்பு வழங்கும் செய்திகள் வாசிப்பவர் குலசேகரம் சஞ்சயன்.

spk_1

உலகளாவிய நிச்சயமற்ற நிலைக்கு மத்தியில் மேலும் எரிபொருள் கையிருப்பை வலுப்படுத்துவதற்காக சிங்கப்பூரில் முக்கியம் வாய்ந்த பேச்சுவார்த்தைகளை பிரதமர் ஆண்டனி அல்பனசி நடத்தி வருவதால், ஆஸ்திரேலியாவின் எரிபொருள் விநியோகம் கிட்டத்தட்ட ஜூன் மாதம் வரை உறுதி செய்யப்பட்டுள்ளது.

spk_1

எமது பெரும்பாலான எரிபொருளை ஆசியாவில் இருந்து பெறுகிறோம். அதேவேளை வட அமெரிக்கா மற்றும் மெக்சிகோவில் இருந்தும் எரிபொருள் கொள்முதல் செய்யப்படுகின்றன என்று எரிசக்தி அமைச்சர் கிறிஸ் பவன் கூறினார்.

spk_1

மத்தியகளுக்கு மோதல் உலகளாவிய நிலையற்ற தன்மையை ஏற்படுத்துவதால், ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய எண்ணெய் வழங்குனருடன் ஒரு உடன்பாடு எட்டப்படும் என்று பிரதமர் நம்புகிறார். தனது பயணத்திற்கு முன்னதாக பேசிய பிரதமர் ஆனி ஆல்பசி ஒரு சாதகமான முடிவு கிடைக்கும் என்று தான் நம்புவதாக கூறினார்.

spk_1

இஸ்ரேலுடன் நேரடி பேச்சுவார்த்தையை நடத்தும் யோசனையை ஹிஸ்புல்லா நிராகரித்துள்ளது. மேற்கொண்டு எந்த நடவடிக்கையும் எடுப்பதற்கு முன்பு போர் நிறுத்தத்தை லெபனான் அரசு கோர வேண்டுமென்றும், லெபனான் மண்ணிலிருந்து இஸ்ரேலிய படைகளை திரும்பப் பெறுவதற்கும், இடம்பெயர்ந்த மக்களை அவர்களின் வீடுகளுக்கு திரும்பச் செய்வதற்கும் முன்னுரிமை அளிக்க வேண்டுமென்றும் தங்கள் அமைப்பு விரும்புவதாக ஹிஸ்புல்லாவின் அரசியல் பிரமுகர் அல் பட் ஒரு அறிக்கையில் கூறியுள்ளார்.

spk_1

ஹம்ஸ் நீரிணியை திறந்த நிலையில் வைத்திருப்பதற்கான சாத்தியமான ஒரு திட்டத்தில் அமெரிக்காவுடன் இணைந்து பணியாற்ற நேட்டோ கூட்டணி தயாராக இருப்பதாக அதன் பொதுச்செயலாளர் மார்க் ரட்டா தெரிவித்தார்.

spk_1

ஈரானில் அமெரிக்க இஸ்ரேலிய குண்டுவீச்சு தாக்குதல்களுக்கு ஐரோப்பிய நட்பு நாடுகள் போதுமான ஆதரவை வழங்காமல் அமெரிக்காவின் பாதுகாப்பு உத்தரவாதங்களை நம்பியிருப்பதாக வாதிட்டு 32 உறுப்பு நாடுகளைக் கொண்ட நார்த் அட்லாண்டிக் ட்ரீட்டி ஆர்கனைசேஷன் நேட்டோ ராணுவ கூட்டணியிலிருந்து விலகுவது குறித்து பரிசீலித்து வருவதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கூறியதைத் தொடர்ந்து ஏற்பட்ட நெருக்கடியை தணிக்கும் முயற்சியில் டிரம்பின் நம்பிக்கைக்குரியவர் என்று ஐரோப்பாவில் அறியப்படும் மார்க் ரட்டா ஈடுபட்டுள்ளார்.

spk_1

பென் ராபர்ட் ஸ்மித் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து சாத்தியமான போர் குற்றங்கள் குறித்து மேலும் விசாரணைகள் நடத்தப்பட வேண்டுமென்று ஆப்கானிஸ்தான் ஆஸ்திரேலிய சமூகம் கோரிக்கை விடுத்துள்ளது. முன்னாள் ராணுவ வீரரின் வழக்கு நீதிமன்றத்தில் விசாரணையில் இருக்கும் வேளையில், ஆஸ்திரேலியாவில் உள்ள ஆப்கானியர்கள் தங்கள் தாயகத்தில் பல தசாப்தங்களாக அனுபவித்த கொடூரங்களை இந்த குற்றச்சாட்டுகள் வெளிச்சத்திற்கு கொண்டு வரும் என்று நம்புவதாக கூறுகின்றனர்.

spk_1

பண்டாய் கடற்கரை படுகொலை நடந்ததைத் தொடர்ந்து உடனடியாக இன வன்முறையை தூண்டியதாக ஒரு இளைஞர் ஒப்புக்கொண்டுள்ளார். கோஸ்வர்ட் உள்ளூர் நீதிமன்றத்தில் நடந்த விசாரணையில் 2025ஆம் ஆண்டு டிசம்பர் 15ஆம் தேதி டிக்டாக்ல் 2 படங்களை பதிவிட புனை பெயர பயன்படுத்திய குற்றத்தை 20 வயதான ரைடர் ராய் ஷா ஒப்புக்கொண்டுள்ளார். கனலா கடற்கரையில் அதற்கு அடுத்த சனிக்கிழமை கலவரம் செய்யுமாறு அவரை பின்தொடர்பவர்களை அந்த படங்கள் தூண்டியிருந்தன.

spk_1

கிரேஸ் டேம் அறக்கட்டளை மூடப்படுவதாக அறிவித்துள்ளது. நீண்டகால நிதியுதவியில் உள்ள சவால்கள் இந்த முடிவுக்கு காரணம் என்று இந்த அமைப்பு கூறியுள்ளது. முன்னாள் ஆஸ்திரேலியாவின் சிறந்த குடிமகள் விருதை பெற்ற கிரேஸ் டேம் 2021ஆம் ஆண்டில் இந்த அறக்கட்டளையை நிறுவினார். அதே ஆண்டில் தான் வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களுக்காகவும் சட்ட சீர்திருத்தத்திற்காகவும் அவர் ஆற்றிய பணிக்காக இந்த தேசிய விருதை அவர் பெற்றிருந்தார்.

spk_1

அரை நூற்றாண்டுக்கு பின்னர், ஆஸ்திரேலியாவின் முதல் எண்ணெய் வயலை திறப்பதற்கான ஒரு திட்டம் குறித்து எரிசக்தி நிபுணர்களும், காலநிலை ஆர்வலர்களும் கவலையையும் சந்தேகத்தையும் வெளிப்படுத்தியுள்ளனர். பிரிஸ்பேனுக்கு அருகிலுள்ள டர என்ற இடத்தில் தோண்டுதலை மேற்கொள்வதற்கான சுற்றுச்சூழல் ஒப்புதல்களை விரைவுபடுத்துமாறு குயின்ஸ்லேண்ட் மாநில அரசு காமன்வெல்த் அரசை வலியுறுத்தி வருகிறது. மேலும், விதிமுறைகள் சீரமைக்கப்பட வேண்டுமென்று லிபரல் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஆண்ட்ரூ வாலஸ் ஸ்கை நியூஸ் தெரிவித்தார்.

spk_1

16 வயதிற்குட்பட்டோருக்கான அரசின் சமூக ஊடக தடையை எதிர்ப்பவர்களை விட ஆதரிக்கும் இளம் ஆஸ்திரேலியர்களே அதிகம் என்று ஒரு ஆய்வு காட்டுகிறது.

spk_1

கல்வி தொழில்நுட்ப வழங்குநரான என்ற அமைப்பு 12 வயது முதல் 24 வயதிற்குட்பட்ட 1,000த்திற்கும் மேற்பட்டோருடன் நடத்திய கணக்கெடுப்பில், அவர்களில் கிட்டத்தட்ட பாதி பேர் 47%ோர் இந்த தடையை ஆதரிப்பதும், கிட்டத்தட்ட மூன்றில் 2 பங்கினர். 62% பேர் இது பயனுள்ளது என்று கருதுவதும் கண்டறியப்பட்டுள்ளது.

spk_1

இத்துடன் எஸ்பிஎஸ் தமிழ் ஒலிபரப்பு வழங்கிய செய்திகள் நிறைவடைகின்றன.

spk_0

இது போன்ற மேலும் பல நிகழ்ச்சிகளை கேட்க வேண்டுமா? ஆப்பிள் போட்காஸ்ட், கூகிள் போட்காஸ்ட் ஸ்பாட்டிஃபை என்று போட்காஸ்ட் கிடைக்கும் பல வழிகளில் நீங்கள் நிகழ்ச்சிகளை கேட்கலாம்.

END OF TRANSCRIPT

Share

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Watch now