'பொது வெளியில் செல்வது ஒரு மோசமான அனுபவம்': திருநர்களின் அன்றாட அனுபவம்

Transphobia Header.png

Professor Nicole Asquith, a criminologist from the University of Tasmania, told SBS Examines that now transgender people have greater visibility in public spaces, they're also more likely to experience hate crimes. Image credit: Getty Images/SBS

நமது மக்கள்தொகையில் திருநர்கள் ஒரு மிகச் சிறிய சிறுபான்மையினராக உள்ளனர், மேலும் அவர்களின் தெரிவு நிலை அதிகரித்துள்ள போதிலும், அவர்கள் கடுமையான சட்டமன்ற விவாதங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் வெறுப்பின் மையமாக இருந்து வருகின்றனர்.


கான்பராவைத் தளமாகக் கொண்ட குடும்ப மருத்துவரான Dr Clara Tuck Meng Soo, குடிவந்த பின்னணியைச் சேர்ந்த பல திருநர்கள் தங்கள் குடும்பங்களின் சகிப்பின்மையை எதிர்கொள்கின்றனர் என்றும், திருநங்கை அல்லது திருநம்பி என்ற அடையாளம் ஒரு மேற்கத்திய கண்டுபிடிப்பு என்று அவர்கள் நம்பக்கூடும் என்றும் கூறினார்.

"பெரும்பாலான திருநர்களிடம் நீங்கள் பேசினால், ஒரு திருநங்கையாக அல்லது திருநம்பியாக இருப்பது உண்மையில் அவர்களின் உள்ளார்ந்த அடையாளத்தின் ஒரு பகுதி என்று அவர்கள் உண்மையில் கூறுவார்கள்," என்று அவர் கூறினார்.

"அவர்கள் ஆஸ்திரேலியாவில் வளர்ந்ததால் அவர்களின் அடையாளத்தை உண்மையாக ஆராய்ந்து உறுதிப்படுத்த வாய்ப்பளித்துள்ளது... மேற்கத்தியமயமாக்கப்படுவதற்கோ அல்லது அவர்களின் பூர்வீக கலாச்சாரத்தை நிராகரிப்பதற்கோ உண்மையில் எந்த தொடர்பும் இல்லை."

"நான் என்னை ஒரு திருநர் என்று அடையாளம் காட்டி, அதைப் பகிரங்கப் படுத்திய போது எனக்குச் சொல்லப்பட்ட பல கதைகள் எல்லாமே, திருநராக இருப்பது மேற்கத்திய விடயம் என்பதுதான்," என்று அவர் SBS Examinesற்குத் தெரிவித்தார்.

"ஆனால், ஆண்டாண்டு காலமாக, ஆசிய கலாச்சாரத்தின் அனைத்துப் பகுதிகளிலும் நாம் திருநர்கள் வாழ்ந்திருக்கிறார்கள். இந்தியாவில் இருந்தாலும் சரி, இந்தோனேசியாவில் ஹிஜ்ராவாக இருந்தாலும் சரி, பசிஃபிக் தீவுகளில் Faʻafafine என்றோ நியூசிலாந்தில் உள்ள மாவோரி கலாச்சாரத்திலும் நாம் தனியாக அடையாளம் காணப்பட்டுள்ளோம்."

நாங்கள் எல்லா இடங்களிலும் இருக்கிறோம். திருநர் என்று அழைக்கப்படுவதில்லை, ஆனால் நாங்கள் எங்கும் இருக்கிறோம்.
Kim

“வெறுப்பு உணர்வுகளைப் புரிந்து கொள்வது” என்ற இந்தத் தொடரில், திருநர்கள் மீதான வெறுப்பு நடத்தை, வெறுப்பு வார்த்தைகளின் தாக்கங்களை இந்த நிகழ்ச்சி ஆராய்கிறது.


SBS தமிழின் ஏனைய நிகழ்ச்சிகளைக் கேட்க எமது podcast பக்கத்திற்குச் செல்லுங்கள்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக SBS South Asian எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்து கொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள். SBS South Asian YouTube channel ஊடாக எமது podcasts மற்றும் videos-ஐப் பார்வையிடுங்கள்.


 'It's a fraught experience just going out in public': The everyday toll of transphobia


To hear more podcasts from SBS Tamil, subscribe to our podcast collection.

Listen to SBS Tamil at 12 noon on SBS South Asian channel on Mondays, Wednesdays, Thursdays and Fridays & 8pm on Mondays, Wednesdays, Fridays and Sundays on SBS Radio 2. Find your area’s radio frequency by visiting our tune in page. For listening on DAB+ digital radio, search for ‘SBS Radio’. On SBS South Asian YouTube channel, follow SBS Tamil podcasts and videos. You can also enjoy programs in 10 South Asian languages, plus SBS Spice content in English. It is also available on SBS On Demand



Share

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Watch now