மறைந்தார் ஞாநி
![Gnani Sankaran. [Inserts: Pritham Chakravarty, Vincent D'Souza; A. Muthukrishnan]](https://images.sbs.com.au/dims4/default/0fa87ec/2147483647/strip/true/crop/704x396+0+0/resize/1280x720!/quality/90/?url=http%3A%2F%2Fsbs-au-brightspot.s3.amazonaws.com%2Fdrupal%2Fyourlanguage%2Fpublic%2Fpodcast_images%2Fgnani_sankaran_2018.jpg&imwidth=1280)
Gnani Sankaran. [Inserts: Pritham Chakravarty, Vincent D'Souza; A. Muthukrishnan] Source: SBS Tamil
ஞாநி என்றும் ஞாநி சங்கர் என்றும் அறியப்படும் தமிழ் எழுத்தாளர், நாடகக் கலைஞர், அரசியல் விமர்சகர், கட்டுரையாளர், அரசியல்வாதி என்று பன்முகத் திறனுள்ள வேம்புசாமி சங்கரன், இன்று அதிகாலை காலமானார். அவருக்கு வயது 64. சமூக விமர்சன நோக்குள்ள வீதிநாடகங்களும் மேடைநாடகங்களும் நடத்தி வந்த ஞானி அவர்கள், பரீக்க்ஷா என்ற குழுவை 30 ஆண்டுகளாக நடத்தி வந்தவர். பரீக்க்ஷா நாடகக் குழுவில் ஞாநியுடன் நீண்ட நாட்கள் பயணித்த ப்ரீதம் சக்ரவர்த்தி, சென்னையில் உள்ளூர் பத்திரிகைகள் பலவற்றை நிறுவி நடத்திவரும் வின்சன்ட் டீ சொய்சா, ஞாநியை தனது வழிகாட்டிகளில் ஒருவர் என்று குறிப்பிடும் எழுத்தாளர், பசுமைநடை செயற்திட்டத்தின் மூலகர்த்தா முத்துக் கிருஷ்ணன் ஆகியோரது நினைவுப் பகிர்வுகளோடு ஞாநி குறித்த ஒரு நிகழ்ச்சி படைக்கிறார் குலசேகரம் சஞ்சயன்.
Share