குறுக்கு வழியில் வீசா! கதைகள் அம்பலம் !!

Source: SBS
ஆஸ்திரேலியாவில் நிரந்தரமாக வாழ வதிவிட வீசா வேண்டுமென்று முயன்று அதில் வெற்றி காணாத பலர், வீசா பெறுவதற்காக மட்டும் திருமணம் செய்துகொள்கிறார்கள். சட்ட பூர்வமாக நிரந்தர வதிவிட வீசா பெறுவதில் எவ்வளவு சிக்கல்கள் இருக்கிறதோ அதே அளவு சிக்கல், பணம் கொடுத்து ஒருவரைத் திருமணம் செய்து கொள்வதிலும் இருக்கிறது. SBS Viceland தொலைக்காட்சியின் The Feed என்ற நிகழ்ச்சி நடத்திய சிறப்பு விசாரணையில், ஆஸ்திரேலிய நிரந்தர வதிவிடம் வாங்கவும் விற்கவும், சட்டத்திற்கு அகப்படாமல் ஒரு சந்தையே நடக்கிறது என்று கண்டுபிடித்துள்ளது. The Feed என்ற நிகழ்ச்சி, SBS வானொலியின் பல்வேறு மொழிக் குழுக்கள் மற்றும் Fairfax பத்திரிகையின் உதவியுடன் நடத்திய இந்த விசாரணை குறித்து Elise Potaka எழுதிய விவரணத்தைத் தமிழில் தருகிறார் குலசேகரம் சஞ்சயன்.
Share

