SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக Pop Desi எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
பாவித்த மின்சாரக் கார் வாங்கும்போது கவனிக்கவேண்டிய முக்கிய விடயங்கள்

Australians looking to buy an EV might be better off going with a second-hand vehicle. Source: Getty
ஆஸ்திரேலியாவில் மின்சார வாகனங்களின் (electric vehicles - EVs) அதிகரிப்பு தற்போது அதிகரித்துள்ளது. விநியோகத் தடைகள் எளிதாகியுள்ளதுடன் மக்கள் பெட்ரோல் கார்களில் இருந்து மாற விரும்புவதும் இதற்கான காரணங்களாகக் கூறப்படுகின்றன. ஆனால் பெரும்பாலான ஆஸ்திரேலியர்களுக்கு ஒரு புதிய EV இன் அதிக விலையானது ஒரு தடையாக இருப்பதனால், ஒரு பாவித்த(second-hand)EV ஒன்றினைப் பெறுவது மிகவும் யதார்த்தமான மற்றும் மலிவான தெரிவாக இருக்கும். Second-Hand EVs அதிகளவில் எப்போது கிடைக்கும்? பாவித்த மின்சாரக் கார்களை வாங்கும்போது கவனிக்கவேண்டிய முக்கிய விடயங்கள் என்ன? மின்சாரக் கார்கள் பற்றிய பல தகவல்களை சிட்னியில் வசித்துவரும் கஜன் மகேந்திரன் அவர்கள் எம்முடன் பகிர்ந்துகொள்கிறார். நிகழ்ச்சித் தயாரிப்பு: மகேஸ்வரன் பிரபாகரன்.
Share