உழவர் திருநாளாம் தைப்பொங்கலை ஒட்டி
தமிழகத்தில் உழவுத் தொழிலில் வெற்றிகரமாக
ஈடுபட்டு வரும் உழவர் சதீஷை சந்திக்கிறோம்.
அவரோடு உரையாடும் நான் ரேணுகா
-வணக்கம் உழவர் சதீஷ்.
-வணக்கம்! வணக்கம் அக்கா.
நாங்கள் உழவர் சதீஷாக உங்களைப் பற்றிக்
கேள்விப்படுகிறோம். ஒரு வெற்றிகரமான இயற்கை
விவசாயத்துடன் இணைந்த ஒரு துறையில் நீங்கள்
இருக்கிறீர்கள். உழவர் சதீஷ் ஆவதற்கு
முன்பிருந்த சதீஷ் பத்தி கொஞ்சம்
சொல்லுங்கள்.
நான் உழவர் சதீஷ் ஆவதற்கு முன்னாடி
பார்த்தீங்கன்னா, நான் படிச்சுட்டு தான்
இருந்தேன்னு சொல்லலாம். இரண்டாயிரத்து
பதினாறுல தான் நான் உழவர் உழவர், அதாவது
விவசாயம் செய்ய ஆரம்பிச்சேன். அதற்கு
முன்னாடி தான் நான் படிச்சு முடிச்சேன்.
பி.இ. படிச்சு முடிச்சேன். இந்த விவசாயம்
செய்யணும்ன்ற எண்ணம் வந்து பார்த்தீங்கன்னா,
எனக்கு இரண்டாயிரத்து பதினாலுல இருந்தே
இருந்தது. நான் இன்ஜினியரிங் படிக்கும் போதே
எனக்கு விவசாயத்தின் மீது ஒரு ஈர்ப்பு
வந்தது. ஏன்னா, எங்க குடும்பம் பாரம்பரிய
விவசாய குடும்பம் தான். நாம இன்ஜினியரிங்
படிக்கப் போனாலும் விவசாயம் மீதான காதல்
ஒரு சாதாரண ஒரு விவசாயம் செய்றதை விட
இயற்கைக்கு சார்ந்த ஒரு விவசாயம் செஞ்சா
மக்களுக்கும் நல்லது அப்படிங்கிறதுனால
இயற்கை விவசாயம் செய்யணும்னு நாங்க
படிக்கும் போதே முடிவு எடுத்தது தான்.
படிச்சு முடிச்சிட்டு விவசாயம்
செய்யலாம்ன்னு வந்தப்போ எப்பயும் போல
பெற்றோர்கள் எதிர்ப்பு, உறவினர்கள்
எதிர்ப்பு, நண்பர்கள் எதிர்ப்பு. எல்லா
எதிர்ப்பையும் பார்க்க வேண்டியதா இருந்தது.
எல்லா எதிர்ப்பையும் சம்பாதிச்சு அப்புறம்
அவங்களை திரும்பி அவங்களே ஆதரவு கொடுக்கிற
அளவுக்கு நாம பேசி, அவங்களை கொஞ்சம்
கன்வின்ஸ் பண்ணி அதுக்கப்புறமா
விவசாயத்துக்குள்ள வந்தோம். பட் வந்த அந்த
இரண்டாயிரத்து பதினாறு ஜூலை மாசத்துக்கு
அப்புறம் பார்த்தீங்கன்னா ஒரே வறட்சி
தமிழகத்துல. அதனால என்னால எடுத்த உடனே
விவசாயம் செய்ய முடியல. அதனால ஒரு ஆறு மாதம்
வந்து நான் படிச்ச பாலிடெக்னிக்
கல்லூரியில் வந்து விரிவுரையாளராகப்
பணியாற்றினேன். அதாவது நான் டிப்ளமோ
படிச்சுட்டு அதுக்கப்புறம் இன்ஜினியரிங்
போனேன். சோ, அதனால என்னால டிப்ளமோ காலேஜில்
நான் படிச்ச காலேஜ் அப்படிங்கிறதுனால அவங்க
என்ன விரிவுரையாளராக உடனே
எடுத்துக்கிட்டாங்க. அதுக்கப்புறம் மழை
வந்தது. அதனால அந்த ஜனவரி மாசம் நெக்ஸ்ட்
இரண்டாயிரத்து பதினேழு ஜனவரியில் இருந்து
தொடர்ச்சியா நாம விவசாயம் செய்ய
-ஆரம்பிச்சிட்டோம்.
-சரி, இப்ப நீங்கள் வந்து இன்ஜினியரிங்
பொறியியல் துறையில் படித்துவிட்டு நீங்கள்
இந்த இயற்கை விவசாயத்துக்குள் வந்து
இருக்கிறீர்கள். இப்போது வெற்றிகரமாகவும்
அதில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறீர்கள். அதை
இப்படியாக உங்களைப் போன்று ஒரு மேற்படிப்பு
போன்று படித்துவிட்டு அதன் பின்னர் இந்த
இயற்கை விவசாயத்திற்குள் வந்தால் நல்லது
என்று நீங்கள் ஆலோசனை சொல்வீர்களா? அல்லது
இயற்கை விவசாயம் தொடர்பில் ஏதாவது
படித்துவிட்டு அதன் பின்னர் இந்தத்
துறைக்குள் வந்தால் நல்லது என்று
சொல்வீர்களா?
என்னோட ஆலோசனை என்னன்னா, இயற்கை விவசாயம்
மீது நிறைய பேருக்கு இப்ப காதல் வந்துகிட்டு
இருக்கு. நல்லா படிச்சு
இருக்குறவங்களுக்கு. ஆனா அவங்களுக்கு ஒரு
சின்ன ஒரு வேண்டுகோள். நீங்க
நேரடியான வேளாண்மைக்குள்ள வராம இருக்குறது
நல்லது. ஏன்னா வேளாண்மை வந்து இருக்குறதுல
மிகக் கடினமான ஒரு துறை. ஏன்னா இதுல லாபம்
என்றதே இல்ல அப்படின்னு சொல்ற அளவுக்குத்
தான் வேளாண்மை இருக்கு இன்னமும். அதனால
படிச்சு முடிச்சுட்டு வேளாண்மைக்குள்ள
வேளாண்மை சார்ந்த தொழில்களில் ஈடுபடலாம்.
ஏன்னா இத நான் ஒரு விவசாயியா இருந்து நான்
ஏன் சொல்றேன்னா, வேளாண்மை பற்றி ஒரு
முன்னறிவு இல்லாமல் நீங்க வர்றது நான்
ஏற்றுக்கொள்ள மாட்டேன். அதனால நான் வந்து
முதல் தரமுறை வேளாண்மை செய்ய வரேன்
அப்படின்னா வராதீங்க. இப்ப என்ன மாதிரி
பரம்பரையா வந்து வேளாண்மை தொழிலைக் கொண்டு
கிராமத்துல இருந்து நகரத்துக்கு வேலைக்காகப்
போயிருப்பாங்க. அந்த மாதிரி இளைஞர்கள்
வேளாண்மைக்கு வர்றதை நான் ஊக்குவிக்கிறேன்.
அவங்க வந்தா மட்டும் தான் இங்க. ஏன்னா,
அவங்க சின்ன வயசுல இருந்தே ஒரு தொழில்ல
நஷ்டம் அடைந்து நஷ்டம் அடைஞ்சு அவங்க அப்பா
கஷ்டப்படுறதை பாத்துருப்பாங்க. சோ, அவங்களால
மட்டும் தான் நம்ம இந்தத் தொழிலை வந்து ஒரு
வெற்றிகரமான ஒரு சூழலுக்கு கொண்டு
போகணும்னு ஒரு எண்ணம் இருக்கும். ரெண்டாவது
அவங்க தோல்வியைக் கண்டாலும் எங்க அப்பா
பாக்காத நஷ்டம் நான் பாத்துடப்போறேன் ன்ற
ஒரு நம்பிக்கை அவங்களுக்கு பிறக்கும். இதுவே
எந்த இந்தத் துறை சாராதவங்க புதுசா உள்ள
வராங்கன்னா, ஒரு தடவை நஷ்டம் ஏற்பட்டாலும்
உடைஞ்சுருவாங்க. அவங்களுக்கு வாழ்க்கையே போன
மாதிரி ஒரு நிலைமை வந்துடும். அதனால
என்னன்னா, ஏன்னா நான் நிறைய பேர்
ஐடி கம்பெனில ஒரு லட்சும் சாளரி வாங்கிட்டு
பணம் சேர்த்து வச்சு நிலம் வாங்கி விவசாயம்
செய்ய வந்தவங்க நிறைய பேர் வந்து நஷ்டம்
ஆகிட்டு திரும்பி சென்னைக்கு வேலைக்குப்
போகும்போது அங்க அவங்களுக்கு எதிர்பார்த்த
அளவுக்கு வேலை இல்லாம ரொம்ப கஷ்டப்படுறாங்க.
சோ, அந்த மாதிரி இல்லாம நீங்க உங்களுக்கு
விவசாயத்துல காதல் இருக்கா? இங்க நிறைய
விவசாயி இயற்கை விவசாயி விவசாயம் பண்ணி
முடிச்சுட்டு அந்தப் பொருளை விற்க முடியாம
கஷ்டப்படுறாங்க. சோ, உங்களால முடிஞ்சதை
நீங்க அந்தப் பொருளை எடுத்துச் சென்னையில
எக்ஸ்போர்ட் நீங்கப் பண்ணி விற்கும்போது
பார்த்தீங்கன்னா அவங்களுக்கு நல்ல லாபம்
கிடைக்கும். இரண்டாவது விவசாயிகளுக்கும் அது
உதவி செஞ்ச மாதிரி இருக்கும்.
இந்த இயற்கை விவசாயத்தோடு இணைந்த பொருட்கள்
அதாவது ஓகானிக் ப்ராடக்ட்ஸ் இருக்கு
இல்லையா? அதை வந்து பலரும் உண்பதற்கு
விரும்புவார்கள். ஆனால் அதை வாங்குவதற்கான
அந்தச் சாத்தியம், அந்தக் கேபாசிட்டி வந்து
மேல்தட்டு மக்களுக்குத்தான் அதிகம்
இருக்கிறது இல்லையா? என்றால் அது விலை
உயர்ந்த பொருட்களாகக் காணப்படுகின்றது.
அப்படி இருக்கிற சூழலில் அடித்தட்டு
மக்களையும் அந்தப் பொருட்கள் எப்படி
சென்றடையும்? இது வந்து இயற்கை
விவசாயத்துக்கு மேல் இருக்கின்ற ஒரு
விமரிசனம் இல்லையா? அந்த மக்களுக்கு எப்படி
இந்தப் பொருட்களைக் கொண்டு சேர்ப்பது?
இது வந்து எப்பவுமே வந்து எந்த ஒரு பொருளுமே
டிமாண்ட் இருக்குற இடத்துல வந்து அதோட விலை
வந்து கூடுதலா தான் இருக்கும்.
இப்போ வந்து அது வந்து மாறிக்கிட்டு
இருக்கு. ஒரு அஞ்சு வருஷத்துக்கு முன்னாடி
கருப்புக்கவனி வந்து நூற்றி எண்பது வித்தது
இருநூறு ரூபா. இருநூற்று ஐம்பது முன்னூறு
வரையும் கூட வித்தது. இப்ப நிலைமை மாறி
இருக்கு. இந்த வருஷம் பாத்தீங்கன்னா எண்பது
ரூபாய்க்கு அந்த அரிசியை விற்க முடியாது.
ஏன்னா இப்ப வந்து விளைச்சல் அதிகமாயிடுச்சு.
முன்னாடி வந்து விளைச்சல் ரொம்ப கம்மியா
இருந்தது. ஒரு குறைந்த நபர்கள் மட்டும் தான்
பயிர் வச்சிட்டு இருந்தாங்க. இப்ப இயற்கை
விவசாயம் மீது ஒரு அதீத நம்பிக்கை காரணமாக
நிறைய பேர் விவசாயத்துக்குள்ள
வந்துருக்காங்க. அதனால விளைச்சல்
அதிகமாயிடுச்சு. அதாவது விளைச்சல் அதிகமாகல
உற்பத்தி அதிகமாயி இருக்கு. அதாவது ஒரு தனி
நபர் விவசாயிக்கான விளைச்சல் அதிகமாகல. ஆனா
மொத்தமா தமிழகத்துல பாக்கும்போது அதோட
உற்பத்தி அதிகமா இருக்குறதுனால இப்போ இனிமே
போகப்போக வர்ற நாட்கள்ல நிச்சயமா வந்து
விலைகள் குறையும். அதே சமயத்துல மக்களும்
வந்து எதிர்பார்க்கணும். எப்படின்னா, இப்போ
கடைல போயிட்டு ஒரு நார்மல் ஒரு அரிசி, ஒரு
பொன்னியோ இல்லாட்டி கோ ஐம்பத்தி ஒன்னு
இல்லாட்டி புல்லட் அரிசி. அந்த மாதிரி
ஹைபிரிட் அரிசி வாங்கும்போது அதோட விலை
வந்து அறுபது ரூபா மினிமம் ரேஞ்சு இருக்கு.
அதுக்கு கீழ போனீங்கன்னா அம்பது ரூபா
நாற்பது ரூபாய்க்கு இருக்கு. இதுல நல்ல
அரிசி, நல்ல சாப்பாட்டு அரிசி அறுபது விலை
கண்டிப்பா வருது. அது அறுபது ரூபா கொடுத்து
ஒரு அரிசி வாங்குறதுக்கு எதுவுமே கெமிக்கல்
போடாம ஒரு பத்து ரூபா தான் அதிகம்.
அவங்களுக்கு எதுவும்
பிரச்சனை ஆகப்போறது இல்ல. ரெண்டாவது
இதுல உங்களுக்கு ரெண்டு இருக்கு. என்னன்னா
அது சன்ன ரக அரிசி வந்து சன்னமா
இருக்குறதுனால நீங்க நிறைய சாப்பிட வேண்டி
இருக்கும்.... இப்ப ஒரு ஒரு சிப்பு அரிசி
காலி ஆகுறதுக்கு உங்களுக்கு ஒரு மாசம்
எடுத்துக்கோங்கன்னா இதுவே நம்ம பாரம்பரிய
அரிசி. அந்த ஒரு சிப்பு காலி ஆகுறதுக்கு
ஒன்றரை மாசம் வரும். பதினைந்து நாள் கூடுதல்
ஆ நீங்க அந்த உணவு சாப்பிடலாம்.
அப்படிங்கும் போது அந்தப் பத்து ரூபாய்ன்றது
உங்களுக்கு லாபமா தான் இருக்கும். அது
வந்து நஷ்டம் ஆகாது.
இப்ப வந்து நீங்கள் சொன்னீர்கள்
உற்பத்தியும் அதிகரித்துக் கொண்டே செல்வதாக.
ஆனால் மக்கள் தொகையை எடுத்துக் கொண்டால்
அதிகரித்துக் கொண்டே செல்கிறது. அப்படி
விவசாயத்துறை அல்லது இந்த இயற்கை விவசாயம்
மீது வைக்கப்படுகின்ற இன்னும் ஒரு
விமர்சனம், அதிகரித்துச் செல்லும் மக்கள்
தொகைக்கு ஏற்ப அந்த உற்பத்தி அளவு
இருப்பதில்லை என்பது. இதற்கு என்ன மாதிரியான
தீர்வு உங்களிடம் இருக்கிறது?
மக்கள் தொகைக்கு ஏற்ப எங்க இயற்கை
விவசாயத்தால உற்பத்தி பணி கொடுக்க
கேள்விக்குறி தான். ஆனா அது எப்படி
சாத்தியப்படுத்தலாம் அப்படின்னா, மக்கள்
வந்து வெறும் அரிசி சோறே சாப்பிடாம
சிறுதானியங்கள் பக்கமும் வந்தாங்கன்னா இங்க
தாராளமா வந்து அவங்களுக்கு விளைஞ்சிருக்கு.
அரிசியும் சிறுதானியங்களும் இருக்கு. அதாவது
இப்போ அந்தக் காலத்துல நம்ம மக்கள் எப்படி
உணவு பழக்கம் இருந்ததுன்னா, சீசனல் உணவுகள்
அதாவது அந்தந்த காலப்பேற்ப உணவுகள்
சாப்பிட்டு வந்தாங்க. சிறுதானியங்கள்
கிடைக்கும்போது சிறுதானியங்களை
சாப்பிட்டாங்க. அரிசி சோறு கிடைக்கும் அரிசி
சோறு சாப்பிட்டாங்க. பயறு வகைகள்
கிடைக்கும்போது பயறு வகைகளை மாவாக்கி அதைக்
கூழ் போலக் கரைச்சு குடிச்சுக்கிட்டு
இருந்தாங்க. சோ, இந்த மாதிரி மூன்று வகையான
உணவுகளை வந்து மனிதர்கள் எடுத்துக்
கொண்டிருந்தாங்க. அந்தக் காலத்துல அரிசி
சோறு சாப்பிடும்போது எவியான ஒரு வொர்க்
அப்போ அந்தக் காலகட்டத்தில் இருக்கும்.
இயற்கையாகவே வயல்ல உழுறதா இருக்கும். வேலை
அதிகமான வேலை இருக்கும். அதனால அரிசி சோறு
அந்த டைம்ல மட்டும் அதிகமா எடுப்பாங்க.
மிச்ச நாட்கள்ல சிறுதானியங்கள் மட்டும் தான்
எடுப்பாங்க. சிறுதானியங்கள் பசி ரொம்ப
நேரத்துக்குத் தாங்கும். அதே மாதிரி பயறு
வகைகள்ல மாவு அரைச்சு அது கூழு பண்ணி
சாப்பிட்டுட்டு இருந்தாங்க. சோ, இந்த மாதிரி
சீசனல் கேற்ற உணவுகள் நாம சாப்பிடும்போது
இந்தப் பிரச்சனை வராது. இது வந்து
மக்களுக்கு நாம திரும்பி வந்து
பாரம்பரியத்தை உட்புகுத்தணும். நம்ம
மக்களுக்கு சோ, நம்ம குழந்தைகளுக்கு நம்ம
குழந்தைகளுக்குச் சின்ன வயசுல இருந்தே
சொல்லிக் கொடுத்துட்டு இருந்தோம்னா
கண்டிப்பா வரும். ஏன்னா, கேரட், பீன்ஸ்
இதெல்லாம் வந்து அந்நிய உணவுகள். நம்ம
தமிழ்நாட்டுக்கோ இல்ல எங்களுக்கோ வந்து
இயற்கை உணவுகள் வெளிநாட்டுக்காரங்க தான்.
நம்ம உணவு பழக்கத்துக்குள்ள கொண்டு
வந்தாங்க. இப்ப நாம சாப்பிடும் எல்லாமே
ஃபூஷன் உணவுகள் ஆயிடுச்சு. இந்த உணவுகள்
எதுவுமே வந்து நம்ம உடம்புக்கு ஒத்து வராது.
அதனால தான் இப்ப உடல் பருமன் இருக்கட்டும்.
அந்த மாதிரி உடல் சார்ந்த நிறைய நோய்கள்
வர்றதுக்கு காரணம் என்னன்னா, நம்ம மண்
சார்ந்த உணவுகளைச் சாப்பிட மறந்துட்டோம்.
தான் நம்மளோட குழந்தைகளுக்கு மண் சார்ந்த
உணவுகள் சாப்பிடும்போதும், அதே சமயத்துல
நம்ம பாரம்பரிய உணவுகளை அதிகமா
ஊக்குவிக்கும் போதும், நாம நிச்சயமா வந்து
தேவைக்கு அதிகமான அளவு உற்பத்தி. இதுவே
இயற்கை விவசாயத்தில் விளையறது போதுமானதாக
இருக்கும்.
உங்களை எடுத்துக்கொண்டால் நீங்க இயற்கை
முறையிலே அதாவது இந்தப் பாரம்பரிய செக்கு
வைத்து நீங்கள் எண்ணெய் தயாரிக்கிறீர்கள்
இல்லையா? அதனால் நீங்கள் அடைந்திருக்கின்ற
வளர்ச்சி அதைப் பற்றி எங்களுக்குக் கொஞ்சம்
சொல்லுங்கள்.
நான் முதல்லயே சொன்ன மாதிரி
ஒரு விவசாயத்துக்குள்ள படிச்சவங்க வேலையை
விட்டு வராதீங்கன்னு நான் சொன்னதுக்கான
காரணம் வந்து விவசாயம் வந்து லாபகரமானது
அல்ல. அத வந்து லாபகரமா மாத்துறது விவசாயி
ஓட திறமைதானே ஒழிய விவசாயத்தில் நிச்சயமா
லாபம் பார்க்க முடியாது. அதனால தான் நம்ம
முன்னோர்கள் வந்து எவ்வளவு நம்ம உழவுல காசு
போட்டோம். அத கணக்கே பார்க்கக் கூடாது
அப்படின்னு சொல்லி இருக்காங்க. ஏன்னா,
கணக்கு பார்த்தா நாம ஜெயிக்க முடியாது.
விவசாயத்துல நிக்க முடியாது. நாம ஓடிப்
போயிடுவோம். கணக்கு நம்ம விவசாயத்தில் என்ன
என்ன செலவு பண்ணிட்டு இருந்தோம்னா விவசாயம்
செய்யவே முடியாது. அதனால விவசாயம் வந்து
எப்பவுமே லாபகரமானது இல்ல. அது எப்படி
லாபகரமா மாற்றனும்னா நம்மோ அதுல இருந்து
வரக்கூடிய பொருட்களை மதிப்பு கூட்டி
விற்றால் மட்டும் தான் முடியும். அதே
சமயத்துல என்னால ஏன் முடியல அப்படின்னா,
எனக்கு வந்து வறட்சியான மாவட்டம். ஒரு
உபோகம் மட்டும் தான் சாகுபடி செய்ய
முடியாது. சோ, அதுல இருந்து வர்ற தானியங்கள்
எனக்கு ஆறு மாசத்துல காலி ஆயிடுது. அதுக்கு
பின்ன எனக்கு வேலை இல்லாமலேயே நான்
இருந்தேன். வருமானமும் இல்ல. அப்பத் தான்
யோசிச்சேன். சரி, விவசாயம் சார்ந்த தொழில்
ஏதாவது ஒன்னு செய்யணும் அப்படின்னு. அப்போ
எங்க பகுதியில அதிகமா விளைஞ்சது
பாத்தீங்கன்னா கடலை கடலை அதிகமா விளைஞ்சது.
அதனால நான் எங்க சுத்தி இருக்குற விவசாயிகள்
ஒரு முன்னூறு நான்கு விவசாயிகள்
ஒன்றிணைந்து அவங்க கிட்ட இருந்து நான்
கடலையை நேரடியா கொள்முதல் பண்ணி நான்
எண்ணெய் எடுத்து மக்களுக்குக் கொடுக்க
ஆரம்பிச்சேன். அது நல்ல வரவேற்பு
பெற்றுச்சு.
நார்மலா ஒரு செக்கு அதாவது இரும்பு செக்கில்
ஆட்டுறதை விட மரச்சக்குல எடுத்துக்
குடுத்தா இன்னும் சத்து அதிகம்
அப்படின்றதுனால ரெண்டு மரச்சுக்கு போட்டு
அதுல இருந்து எண்ணெய் எடுத்து நேரடியா
மக்களுக்குக் கொடுத்துட்டு இருக்கேன்.
தமிழகம் முழுவதும் ஒரு இரண்டாயிரம்
கஸ்டமர்ஸ் வந்து நமக்கு இருக்காங்க.
அவங்களுக்கு மாதாந்திரம் அவங்களுக்கு என்ன
நான் பார்சல் மூலமா அனுப்பிட்டு இருக்கேன்.
இதனால என்னன்னா, எனக்கு நிரந்தர வருமானம்.
ஒரு மாதத்துக்கு குடும்பத்தை நடத்தக்கூடிய
ஒரு நிரந்தர வருமானம் ன்றது எனக்குச் செக்கு
மூலமா வந்துருது. அப்போ விவசாயம்ன்றது
என்னன்னா, எனக்கு ஒரு எக்ஸ்ட்ரா வருமானம்
மாதிரி தான் ஆயிடுது. சோ, இதுல வந்து எனக்கு
நஷ்டம் வந்தாலும் என்னோட லைஃப் பாதிக்காது.
லாபம் வந்தாலும் லைஃப் பாத்திங்கனா லாபம்
வந்தா சேர்த்து வச்சுக்கலாம். நஷ்டம் வர்ற
சமயத்துல நாம அந்த லாபத்துல பங்கு
எடுத்துக்கலாம். இல்லாட்டி அதை நஷ்டமாவே
ஏத்துக்கலாம். அந்த மாதிரி நிலைமை தான்.
எனக்கு விவசாயம் வந்து என்ன நேரடியா லைஃப்
பாதிக்காது. எப்பவுமே அது ஒரு தனி
கேட்டகிரியா நான் வச்சுருக்கேன். ஏன்னா
எனக்குத் தெரியும் விவசாயம் வந்து. ஏன்னா
எடுத்துக்காட்டுக்குச் சொல்லனும்னா, போன
வருஷம் சம்பா போகத்துல நான் ஒரு லட்ச ரூபாய்
லாபம் சம்பாதிச்சேன். அடுத்த போகத்துல
எனக்கு நஷ்டம் ஆயிடுச்சு. எனக்கு அந்த ஒரு
வந்த ஒரு லட்சமும் அடுத்த போகத்துக்கான
நஷ்டத்துல ஈடு கட்டிட்டேன். சோ,
விவசாயம்ன்றது இப்படி ரெண்டாம் கட்ட
நிலைமையா தான் இருக்கு. சோ, அதனால என்னோட
வாழ்க்கைத் தரத்தை உயர்த்தணும். அடுத்த
கட்டத்துக்குப் போகணும்னா விவசாயம் சார்ந்த
தொழில் கண்டிப்பா கையில இருக்கணும். அதனால
விவசாயம் சார்ந்த தொழிலான மரச்சக்கு எண்ணெய்
உற்பத்தியை நான் வந்து தொடர்ந்து
செஞ்சுகிட்டு இருக்கேன்.
உழவர் சதிஷாக நீங்கள் எவ்வளவு சந்தோஷமாக
இருக்கிறீர்கள்?
நிச்சயமா நான் உழவர் சதிஷாக. நான் ரொம்ப
மகிழ்ச்சியா தான் இருக்கேன். எப்பவுமே நான்
இங்க வந்து ஆறு வருஷங்கள் ஆகுது. எனக்கு
நகரத்துல படிச்சுட்டு இருந்தபோது எனக்கு
அவ்வளவு முடி கொட்டிச்சு. எனக்குப் பயம்
வந்து சீக்கிரமா எனக்குச் சொட்டை
விழுந்துடுமோ அப்படிண்டு. அப்படி
இருக்கும்போது இங்க வந்துட்டு பாத்தீங்கன்னா
எனக்கு முடி கொட்டுறதே இல்ல. ஏன்னா இங்க
நான் வந்து எனக்கு ஒரு டென்ஷன்ன்றது
கிடையாது. ஒரு டிப்ரஷன்ன்றது ஒன்னு
கிடையாது. ஸ்ட்ரெஸ்ன்னு ஒன்னு கிடையாது.
எதுவுமே இல்ல. இங்க நான் நிம்மதியா
இருக்கேன். எனக்கு இப்ப தொழில்ல வந்து
ஏற்றerகங்கள் இருக்கும். இந்த மாசம் அதிகமா
என்ன வித்து இருக்கோம். போன மாசம்
ஒரு மூணு மாசத்துக்கு வியாபாரமே இல்லாம
இருக்கும். ஆனாலும் எனக்கு இங்க அத நான்
ஸ்ட்ரெஸ் எடுத்துக்க மாட்டேன். அந்த
வியாபாரத்தை எப்படி பெருக்கணும்னு மட்டும்
என்ன எனக்கு முடிஞ்சுச்சு. அத என் மைண்ட்ல
ஸ்ட்ரெஸ் எடுத்துக்க மாட்டேன். எனக்கு.
எனக்கு மேல பிரஷர் கிடையாது. எனக்கு
இன்னைக்கு ரொம்ப பிரஷரா இருந்துச்சுனா நான்
லீவு போட்டுருவேன். என்ன ஏன் லீவு
போட்டோம்னு கேக்குறதுக்கு இங்க ஆள்
கிடையாது. ஏன்னா நான் தான் தொழிலோட ஓனர்.
முதலாளி நான்தான். அதனால என்ன யாரு கேள்வி
கேக்க முடியாது. எனக்குப் பிடிச்சா வேலை
செய்வேன். பிடிக்கலைன்னா வித்துருவேன்.
கனிமொழிக்கு போயி இந்த வேலை இந்த இத்தனை
நாள்ல செய்யணும்னு தான் முடிவு. ஒழிய
இன்னைக்கு செஞ்சே ஆகணும்ன்ற ஒரு கட்டாயமோ,
நிர்ப்பந்தமோ இங்க இருக்காது. அதனால என்னோட
வாழ்க்கைய நான் ரொம்ப சந்தோஷமா தான்
இருக்கேன். என்னோட குழந்தைங்களும் சந்தோஷமா
தான் இருக்காங்க. எனக்கு என்ன ஒரே ஒரு
கஷ்டம். என்னோட குழந்தைக்கு ஒரு நல்ல
கல்வியை கொடுக்க முடியுமான்றது மட்டும்தான்
எங்க ஒரு எண்ணம். ஆனா இந்தக் கிராமத்துல
இருந்து அத நான் குடுத்துட்டனா எனக்கு அதோட
ஒரு பெரிய வெற்றியே கிடையாது. ஏன்னா,
எனக்குத் தெரியும் நான் வந்து இன்ஜினியரிங்
போய்ச் சேர்ந்தபோது நான் கிராமத்துல இருந்து
வந்ததுனால அங்க இருக்குற பசங்களோட
நாளேஜ்க்கு நான் காம்பிடேட் பண்ண முடியல.
அதனாலயே இன்ஜினியரிங் கம்மியான மார்க்
எடுத்தேன். ஏன்னா அங்க எல்லாருமே சிபிஎஸ்இ
ஸ்கூல்ல இன்டர்நேஷனல் ஸ்கூல்ல படிச்சுட்டு
வந்தாங்க. நான் ஒரு
கிராமத்துல இருக்குற பள்ளிக்கூடத்துல
படிச்சுட்டு வந்ததுனால என்னால அவங்களோட
நாளேஜ்க்கு காம்பிடேட் பண்ண முடியல. என்
குழந்தைக்கு அந்த நிலை மாறக் கூடாது. என்
குழந்தைக்கு அந்த அளவு நாளேஜ் ஆன ஒரு
எஜுகேஷன் கொடுக்கணும்னு மட்டும் தான் எனக்கு
ஒரே எண்ணம். அத மட்டும் நான் இங்க
ஏற்படுத்திக் கொடுத்துட்டுன்னா, அதோட வேற
எந்த மகிழ்ச்சி இல்ல. இப்போதைக்கு எனக்கு
இருக்குற ஒரே கஷ்டம் அது மட்டும்தான்.
மத்தபடி நான் இங்க ஏன் வந்தான்னு நினைச்சதே
கிடையாது.
தை பொங்கலை முன்னிட்டு உழவர் திருநாள்
அதையொட்டி உழவர் சதிஷ் ஆன உங்களை
சந்தித்ததில் எங்களுக்கு மிக்க மகிழ்ச்சி.
உங்களது முயற்சி தொடரட்டும். பல வெற்றிகளை
நீங்கள் பெற வேண்டுமென்று வாழ்த்துகிறோம்.
நன்றி வணக்கம்!
END OF TRANSCRIPT