அதிமுகவின் பொது செயலாளர் வி.கே.சசிகலா தமிழகத்தின் மூன்றாவது பெண் முதலமைச்சராக பொறுப்பேற்க உள்ளார். தமிழக முதலமைச்சரான ஓ.பன்னீர்செல்வம் நேற்று தனது பதவியை ராஜினாமா செய்தார். அவரின் ராஜினாமா ஏற்றுக்கொள்ளப்பட்டதாக தமிழக ஆளுநர் அறிவித்துள்ளார்.தமிழக முதலமைச்சராக சசிகலா நாளை அல்லது வரும் 9ம் தேதி பதவியேற்பார் என்று செய்திகள் தெரிவிக்கின்றன. பதவியேற்க சசிகலா காத்து கொண்டிருக்கும் நேரத்தில் சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்டோர் விடுதலையை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கில் இன்னும் ஒரு வாரத்தில் தீர்ப்பு வழங்கப்படும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. உச்சநீதிமன்றத்தின் இந்த அறிவிப்பு சசிகலாவுக்கு பெரும் சவாலை ஏற்படுத்தும் என்று அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர். இது குறித்த விரிவான செய்தியை முன் வைக்கிறார் எமது தமிழக செய்தியாளர் ராஜ்.