விசித்திரமா? வினோதமா? வியட்நாமிய இரட்டையர்கள் செய்த குழப்பம்

OBSEV / Shutterstock

OBSEV / Shutterstock Source: OBSEV / Shutterstock

இரட்டைக் குழந்தைகளை பெற்ற மகிழ்ச்சியில் திளைத்துக் கொண்டிருந்த இருந்த வியட்நாம் நாட்டைச் சார்ந்த கணவன் மனைவிக்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. குழந்தை பிறந்த சில நாட்களில் இரண்டு குழந்தைகளுக்கும் வித்தியாசம் நிறைய இருப்பதாக உறவினர்கள் கூற, DNA பரிசோதனைக்கு அழைத்துச் சென்றுள்ளார் குழந்தைகளின் தந்தை. ஒரு குழந்தைக்கு அடர்த்தியான சுருட்டை முடியும், இன்னொரு குழந்தைக்கு நீளமான மெலிதான முடியும் இருந்த நிலையில், DNA பரிசோதனை முடிவில் யாருமே எதிர்பார்த்திராத ஒரு முடிவு காத்திருந்தது. இரண்டு குழந்தைகளுக்கும் இரண்டு வெவ்வேறு தந்தைகள் என முடிவு வந்தது. முடிவை பார்த்த தம்பதியர் அதிர்ச்சி அடைந்தனர். காரணம் இது அரிதிலும் அரிதான நிகழ்வு. வியட்நாம் ஜெனடிக் அமைப்பின் தலைவர் லீ டின் லுவாங்க் (Lee Dinh Luong) கூறுகையில், “இது வியட்நாமிற்கு மட்டுமல்ல, உலகிற்கே புதிதான ஒரு நிகழ்வு. இரு குழந்தைகளும் ஒரே தினத்தில் பிறந்துள்ளன. மேலும் இரு குழந்தைகளும் ஒரே பாலினத்தைச் சார்ந்ததுதான். இதுபோல உலகெங்கும் 10 இரட்டையர்கள்தான் இருப்பார்கள்” என்றார். ஒருவேளை மருத்துவமனை, குழந்தையை மாற்றி இருக்குமோ என்ற சந்தேகத்தை தீர்க்க, அம்மாவின் மரபணு பரிசோதிக்கப்பட்டது. இரு குழந்தைக்கும் ஒரே அம்மாதான் என்று முடிவு வந்தது. மேலும், ஷெஃப்பீல்ட் பல்கலைக்கழகத்தின் நோயியல் பேராசிரியரான அல்லன் பாசி( Allan Pacey) கூறுகையில், “இந்த நிகழ்வுக்கு heteropaternal superfecundation என்று பெயர். இது நிகழ்வதற்கு பல விஷயங்கள் வரிசையாக நடைபெற வேண்டும். ஒரு பெண்ணுக்கு ஒரு கருமுட்டைக்குப் பதிலாக இரு கருமுட்டைகள் ஒரே நேரத்தில் உருவாக வேண்டும். மேலும், அப்பெண் குறிப்பிட்ட சில மணி நேரத்திற்குள் இரு வேறு ஆடவருடன் உடலுறவு கொள்ள வேண்டும். அதாவது ஐந்திலிருந்து ஆறு மணி நேரத்திற்குள்”.



Share
Follow SBS Tamil

Download our apps
SBS Audio
SBS On Demand

Listen to our podcasts
Independent news and stories connecting you to life in Australia and Tamil-speaking Australians.
Ease into the English language and Australian culture. We make learning English convenient, fun and practical.
Get the latest with our exclusive in-language podcasts on your favourite podcast apps.

Watch on SBS
Tamil News

Tamil News

Watch in onDemand
விசித்திரமா? வினோதமா? வியட்நாமிய இரட்டையர்கள் செய்த குழப்பம் | SBS Tamil