விக்டோரியாவில் கருணைக்கொலை செய்துகொள்வதில் உட்பட்டுள்ள விடயங்கள் எவை?

getty

Source: Getty

விக்டோரிய மாநில அரசு euthanasia என்ற ‘துன்பமற்ற மரணத்திற்கு உதவுதல்’ தொடர்பான சட்டத்தை 19.06.2019 அன்று அமுல்படுத்தியிருக்கிறது. நம்நாட்டில் வேறு எந்த மாநிலத்திலோ அல்லது பிராந்தியத்திலோ இச்சட்டம் அமுலில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும். இது தொடர்பில் விளக்குகிறார் பிரபல ஒலிபரப்பாளர் இரா.சத்தியநாதன் அவர்கள்.


குணப்படுத்த முடியாத நோய் காரணமாக சகிக்கமுடியாத வலி மற்றும் உபாதையால் துன்பப்படும் ஒருவர் தனது உயிரைப்போக்கிக்கொள்ள சட்டப்படி உதவிபெறமுடியும்.

இதற்கு விண்ணப்பம் செய்பவர் 18 வயது நிரம்பியவராக இருக்கவேண்டும்; இவர் 6மாதங்களுக்கு மேல் உயிர் வாழ மாட்டார்-neuro degenerative Disease என்ற நரம்புச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்டிருந்தால், 12 மாதங்களுக்கு மேல் உயிர் வாழமாட்டார் என்பதை இரண்டு வைத்தியர்கள் உறுதி செய்யவேண்டும் ; இவர் விக்டோரிய மாநிலத்தில் நிரந்தரமாக வசிப்பவராக இருக்கவேண்டும் என்பது உட்பட பல்வேறு நிபந்தனைகளை, விண்ணப்பதாரி பூர்த்திசெய்யவேண்டும்.

Lethal drug என்ற இந்த மரணத்தை ஏற்படுத்தும் மருந்தை Alfred hospital என்ற விக்டோரிய மாநில வைத்தியசாலை கொண்டுசென்று நோயாளிக்கு வழங்கும். பூட்டப்பட்ட பெட்டியில் இருந்து இதை அவர் எடுத்து, இரண்டு திரவங்களை ஒரு கோப்பையில் கலந்து அருந்தவேண்டும். முதலில் மயக்கநிலை ஏற்பட்டு பின்னர் ஓருமணித்தியாலத்தில் மரணம் நிகழும் என்று கூறப்படுகிறது.

கடந்த 17 மாதங்களுக்கு முன்னர் விக்டோரிய மாநில பாராளுமன்றத்தில் மிகக்குறைந்த வாக்குவித்தியாசத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட இந்த மசோதா, பல பரிசீலனைகள் மற்றும் பாதுகாப்பு உப பிரிவுகள் என்பன சேர்க்கப்பட்டு தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ளது.


Share
Follow SBS Tamil

Download our apps
SBS Audio
SBS On Demand

Listen to our podcasts
Independent news and stories connecting you to life in Australia and Tamil-speaking Australians.
Ease into the English language and Australian culture. We make learning English convenient, fun and practical.
Get the latest with our exclusive in-language podcasts on your favourite podcast apps.

Watch on SBS
Tamil News

Tamil News

Watch in onDemand