முகமூடி அணிதல்: பல தமிழ் நேயர்களின் அனுபவங்கள்

Source: SBS Tamil
நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று அடங்க மறுக்கிறது. இந்த தொற்றை எப்படியாவது கட்டுப்படுத்தியே ஆகவேண்டும் எனும் நோக்கில் மாநில அரசுகள் பல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. குறிப்பாக விக்டோரிய மாநிலத்தில் வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்கிறது. இந்த தொற்றைக் கட்டுப்படுத்தும் நோக்கில் Metropolitan Melbourne மற்றும் Mitchell Shire பகுதிகளில் வாழும் மக்கள் வெளியில் செல்லும்போது Facial Mask எனப்படும் முகமூடி அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. NSW மாநிலத்திலும்கூட மக்கள் முகமூடி அணிவது ஊக்கிவிக்கப்படுகிறது. முகமூடி அணிவதால் ஏற்படும் நன்மைகள் அல்லது சிக்கல்கள், சிரமங்கள் என்ன? வாங்க பேசலாம் நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர்கள் முன்வைத்த கருத்துக்களின் தொகுப்பு. விருந்தினர்கள்: மெல்பன் நகரிலிருந்து செரீனா மற்றும் சிட்னி நகரிலிருந்து முத்துக்குமரன் ஆகியோர். நிகழ்ச்சியாக்கம் : றைசெல்.
Share