ஆஸ்திரேலியா வரும் வெளிநாட்டு மாணவர்களுக்கு என்னென்ன தங்குமிட வசதிகள் உள்ளன?

Group of four young adults relaxing on patio outside house with food and drink

Multi racial group of friends enjoying lunch, talking and smiling on wooden decking Credit: JohnnyGreig/Getty Images

வெளிநாட்டு மாணவர்களைக் கவர்கின்ற நாடாக ஆஸ்திரேலியா காணப்படுகின்ற பின்னணியில் இங்கு வரும் வெளிநாட்டு மாணவர்களுக்கு என்னென்ன தங்குமிட வசதிகள் உள்ளன என்பது தொடர்பில் Melissa Compagnoni ஆங்கிலத்தில் தயாரித்த விவரணத்தை தமிழில் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.


வெளிநாட்டு கல்வியைப் பொறுத்தவரை மிகவும் பிரபலமான நாடுகளில் ஒன்றாக ஆஸ்திரேலியா அறியப்படுகிறபோதிலும் மாணவர்களுக்கான வாடகை தங்குமிடம் தொடர்பில் தற்போது குறிப்பிடத்தக்க சவாலை எதிர்கொள்கிறது.

இந்தப்பின்னணியில் மாணவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக வடிவமைக்கப்பட்ட பல்வேறு வகையான தங்குமிடங்களைப் பற்றி பார்ப்போம்.

தங்குமிடத்திற்கான தேடலைத் தொடங்கும்போது, நீங்கள் எங்கு படிக்கிறீர்கள் என்பதை உறுதிப்படுத்தியவுடன் தொடங்குவது முக்கியம். உங்கள் வரவுசெலவு, இருப்பிடம் மற்றும் வாழ்க்கை முறைக்கு ஏற்றவாறு தங்குமிடத்தைக் கண்டுபிடிப்பது அவசியம்.

பொதுவாக மாணவர்கள் ஆஸ்திரேலிய குடும்பத்துடன் வசிக்கும் home stay- அதாவது உணவுடன் தங்கும் இடம் அல்லது ஒரு அறை என்பதே பல ஆண்டுகளாக காணப்படும் ஏற்பாடு எனவும், ஆஸ்திரேலிய கலாச்சாரத்தை அனுபவிக்க விரும்பும் மாணவர்களின் தெரிவாக இது அமைவதாகவும் சொல்கிறார் Australia Study இயக்குனர் Wojtek Wawrzynski
young asian woman studies with laptop from home
Credit: Cavan Images/Getty Images
மறுபுறம், purpose-built student accommodation என்ற மாணவர்களுக்கென்றே உருவாக்கப்படும் தங்குமிடங்களும் தற்போது அதிகரித்து வருகின்றன.

தொழில்முறை ரீதியாக உரிய தரப்பினரால் நிர்வகிக்கப்படும் இந்த அடுக்குமாடி குடியிருப்புகளின் எரிசக்தி கட்டணங்கள் மற்றும் பராமரிப்பு ஆகியவை வாடகையில் சேர்க்கப்படும்,

பெரிய பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகள் அல்லது பொதுப் போக்குவரத்துக்கு அருகில் உள்ள மாணவர் குடியிருப்புகளை நீங்கள் கண்டிருக்கலாம்.

மூலோபாய ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட இந்த இடங்கள் மூலம் தமது கல்வி நிறுவனங்களுக்கு இலகுவாகச் செல்லலாம் என்பதால், மாணவர்கள் தங்கள் கல்விப் பயணத்தின் போது தொந்தரவு இல்லாத வாழ்க்கை அனுபவத்தை எதிர்பார்க்கலாம் என்கிறார் Wojtek Wawrzynski

UniLodge, Campus Living Villages மற்றும் Student Housing Australia போன்ற பிரபலமான இணையதளங்கள் இந்த purpose-built மாணவர் தங்குமிடத்திற்கான விண்ணப்பங்களை நிர்வகிக்கின்றன.

Australia Study போன்ற மாணவர் ஆதரவு நிறுவனம் மூலமாகவும் நீங்கள் விண்ணப்பிக்கலாம்.

ஆஸ்திரேலியாவில் குடியேறியவுடன், வாழ்க்கைச் செலவுகளைச் சமாளிப்பதற்காக, பிரதான வாடகைச் சந்தைக்குள் நிரந்தர தங்குமிடங்களைக் கண்டுபிடித்து மாணவர்கள் இந்நாட்டு வாழ்க்கைக்கேற்ப தம்மை ஒழுங்கமைத்துக்கொள்கிறார்கள்.

Flatmates.com.au என்ற இணையதளம் மாணவர்களிடையே மிகவும் பிரபலமானது எனவும் இதனூடாக Share accommodation என்ற ஏற்பாட்டுக்குள் மாணவர்கள் செல்வதாகவும் விளக்குகிறார் Wojtek Wawrzynski
SG StudentAccommodation
A front-view shot of a young university student standing proud with a smile, she is wearing casual clothing and looking at the camera. Credit: SolStock/Getty Images
Flatmates.com.au தவிர flatmatefinders.com.au மற்றும் Gumtree ஆகியவை shared housing தெரிவுகளைக் கண்டறிவதற்கான பிரபலமான வலைத்தளங்களாகும்.

சிட்னியை தளமாகக் கொண்ட S M அமினுல் ஆஸ்திரேலியாவில் படிப்பதற்காக வங்கதேசத்திலிருந்து வந்தவர். தற்போதைய வாடகை நெருக்கடியை எதிர்கொண்டுள்ள அமினுல், தனது அனுபவத்தைவைத்து தங்குமிடம் தேடும் மாணவர்களுக்கு உதவவென பேஸ்புக் சமூகக் குழுவொன்றை உருவாக்கினார்.

அமினுல் தனது தொடர்புகளைப் பயன்படுத்தி வீட்டுச் சொந்தக்காரர்களை மாணவர்களுடன் இணைக்கிறார். பல உரிமையாளர்கள் தங்கள் வீடுகளைப் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சியடைவதையும் அடிக்கடி மாணவர்களைத் தேடுவதையும் அவர் காண்கிறார்.

மாணவர்கள் தங்கள் கல்வி நிறுவனத்தில் உள்ள சமூக குழுக்களைத் தேடுமாறும் அமினுல் ஊக்குவிக்கிறார்.

சர்வதேச மாணவர்கள் எதிர்கொள்ளும் மிகப்பெரிய தடைகளில் ஒன்றாக மொழி காணப்படுகின்ற பின்னணியில் தங்கள் சொந்த மொழி பேசுபவர்களிடமிருந்து இவர்கள் உதவி கேட்க முற்படலாம் எனவும் அமினுல் ஊக்குவிக்கிறார்.

கல்வி வளாகத்திலோ அல்லது அருகாமையிலோ, பல்கலைக்கழகத்திற்குச் சொந்தமான residential colleges மற்றும் apartmentகளையும் நீங்கள் அவதானித்திருக்கலாம்.

ஆஸ்திரேலியாவில் இதற்கு முன் கல்விநெறியை மேற்கொள்ளாதவர்கள் இத்தகைய University accommodationஐக் கருத்தில் கொள்ளுமாறு பரிந்துரைக்கிறார் கான்பராவிலுள்ள ஆஸ்திரேலிய தேசிய பல்கலைக்கழகத்தின் Deputy Vice-Chancellor பேராசிரியர் Sally Wheeler.
SG StudentAccommodation
A diverse group of students in their 20's walking down some steps on campus laughing and talking to each other. Credit: SolStock/Getty Images
உணவு, பொதுவான பொழுதுபோக்கு இடங்கள் மற்றும் பாதுகாப்பான தனி அறைகளை residential colleges வழங்குகின்றன.

பெரும்பாலான பல்கலைக்கழகங்களில் ஒன்று அல்லது இரண்டு residential colleges பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளதாகவும் மாணவர்கள் தமது தேவைக்கேற்ப இங்குள்ள வசதிகளைப் பயன்படுத்திக்கொள்ளலாம் எனவும் பேராசிரியர் Sally Wheeler விளக்குகிறார்.

Residential collegesஇல் ஒரு அறைக்கான செலவு ஒவ்வொரு பல்கலைக்கழகத்திற்குமிடையே கணிசமாக வேறுபடுகின்றன. குறிப்பாக வாரத்திற்கு $700 வரை கூட செலுத்தவேண்டியிருக்கலாம்.

இருப்பினும், இந்த செலவு பல்வேறு வசதிகள் மற்றும் சேவைகளை உள்ளடக்கியது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம்.

நீங்கள் மிகவும் சுதந்திரமான வாழ்க்கையுடன் ஏனைய வசதிகள் மற்றும் சமூக வாய்ப்புகளைப்பெற விரும்பினால், general university-owned accommodation மிகவும் மலிவான தெரிவாக இருக்கலாம். இந்த இரண்டு வகையான தங்குமிடங்களுக்கான விண்ணப்ப செயல்முறையை பல்கலைக்கழகங்கள் நிர்வகிக்கின்றன.

On-campus accommodation -பல்கலைக்கழக வளாகத்திலேயே உள்ள தங்குமிட வசதிகளுக்கு கூடுதலாக, சில பல்கலைக்கழகங்கள் வளாகத்திற்கு வெளியே கிடைக்கின்ற தங்குமிட வசதி தொடர்பிலும் தங்கள் சொந்த தரவுத்தளங்களைக் கொண்டிருக்கின்றன.

இந்த தரவுத்தளங்கள் அனைத்தினூடாகவும் தற்போதைய மற்றும் வருங்கால மாணவர்களும் பயன்பெறலாம் எனவும், பல்கலைக்கழக வளாகத்திற்கு வெளியேயான தங்குமிட வசதிகளைக் கண்டறிவதற்கான ஆதாரத்தை இவை வழங்குகின்றன எனவும் குறிப்பிடப்படுகிறது.

மேலதிக தகவல்கள்
Study Australia (Australian Government)
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in 
பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் 
செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Share
Follow SBS Tamil

Download our apps
SBS Audio
SBS On Demand

Listen to our podcasts
Independent news and stories connecting you to life in Australia and Tamil-speaking Australians.
Ease into the English language and Australian culture. We make learning English convenient, fun and practical.
Get the latest with our exclusive in-language podcasts on your favourite podcast apps.

Watch on SBS
Tamil News

Tamil News

Watch in onDemand
ஆஸ்திரேலியா வரும் வெளிநாட்டு மாணவர்களுக்கு என்னென்ன தங்குமிட வசதிகள் உள்ளன? | SBS Tamil