Key Points
- ரமலான் இஸ்லாத்தின் புனிதமான மாதமாகும், இதன் போது ஆரோக்கியமான வயது வந்த முஸ்லிம்கள் விடியற்காலை முதல் மாலை வரை நோன்பு நோற்கிறார்கள்.
- ஈத் அல் பித்ர் என்பது புனிதமான நோன்பு மாதத்தின் முடிவின் மூன்று நாள் கொண்டாட்டமாகும்.
- முஸ்லீம் ஆஸ்திரேலியர்கள் தங்கள் தனித்துவமான கலாச்சார நடைமுறைகளை ஈத் கொண்டாட்டத்தில் பின்பற்றுகிறார்கள்.
ஆஸ்திரேலியா கணிசமான முஸ்லீம் மக்களைக் கொண்ட ஒரு பன்முக கலாச்சார நாடு. நீங்கள் ஒரு சிறுபட்டணத்திலோ அல்லது ஒரு பெரிய நகரத்திலோ வசித்திருந்தால், நீங்கள் ஒரு முஸ்லிமுடன் நட்பாக இருந்திருக்கலாம் அல்லது வேலை செய்திருக்கலாம்.
Aஒருவருக்கொருவர் மதம் மற்றும் கலாச்சாரத்தைப் புரிந்துகொள்வதும் பாராட்டுவதும் ஒருங்கிணைந்த பன்முக கலாச்சார சமூகத்தின் அடிப்படை அம்சமாகும்.
ஆஸ்திரேலியா மற்றும் உலகெங்கிலும் உள்ள முஸ்லிம்கள் ரமலானை கொண்டாட ஆயத்தமாகி வருகின்றனர், இது ஒரு மாத கால வழிபாடு மற்றும் நோன்பு.
ரமலான் என்பது இஸ்லாமிய சந்திர நாட்காட்டியின் ஒன்பதாவது மாதமாகும், இதன் போது ஆரோக்கியமான வயது வந்த முஸ்லிம்கள் விடியற்காலையில் இருந்து மாலை வரை நோன்பு இருக்க வேண்டும்.
மெல்போர்னில் உள்ள Charles Stuart பல்கலைக்கழகத்தில் இஸ்லாமிய ஆய்வுகள் மற்றும் நாகரிகத்திற்கான மையத்தின் துணைத் தலைவராக இணைப் பேராசிரியர் Zuleyha Keskin பணியாற்றி வருகிறார்.
ரமலான் மாதத்தில் இஸ்லாமியர்களுக்கு ஒரு பெரிய கற்றல் அல்லது மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை செயல்முறைகள் நடைபெறுகின்றன என அவர் கூறுகிறார்.

எனவே, ரமலான் என்றால் என்ன?
ஹிஜ்ரி நாட்காட்டி என்றும் அழைக்கப்படும் இஸ்லாமிய நாட்காட்டி, பூமியைச் சுற்றியுள்ள சந்திரனின் சுழற்சியை அடிப்படையாகக் கொண்டது. இது சூரிய ஆண்டை விட 10 முதல் 12 நாட்கள் குறைவாக இருப்பதால், இஸ்லாமிய நிகழ்வுகளுக்கான தேதிகள் ஒவ்வொரு ஆண்டும் மாறுபடும்.
ஆஸ்திரேலியாவில் இந்த ஆண்டு, புனித ரமலான் மாதம் மார்ச் 12 ஆம் தேதி ஆரம்பமாகிறது.
ரமலான் இஸ்லாமியர்களுக்கு புனிதமான மாதமாகக் கருதப்படுகிறது, இது மிகவும் சிறப்பான மாதமாகவும் அமைகிறது.Professor Zuleyha Keskin, Associate Head of the Centre for Islamic Studies and Civilisation at Charles Stuart University, Melbourne.
ரமலான் என்பது உணவு அல்லது பானங்களைத் தவிர்ப்பது மட்டுமல்ல அதனை விட அதிக முக்கியத்துவம் பெற்றது என்கிறார் ஆஸ்திரேலிய தேசிய பல்கலைக்கழகத்தின் அரபு மற்றும் இஸ்லாமிய ஆய்வுகளுக்கான மையத்தின் இயக்குனர், பேராசிரியர் Karima Laachir.
"மிக முக்கியமாக, இது ஆன்மீகத்தின் மாதம், இது ஒருவரின் நம்பிக்கையுடன், கடவுளுடன் மீண்டும் இணைவதற்கு அர்ப்பணிக்கப்பட்ட மாதம்" என்று மேலும் விளக்குகிறார் பேராசிரியர் Laachir.

முஸ்லிம்கள் ஏன் நோன்பு நோற்க வேண்டும்?
நோன்பு (அரபு மொழியில் ஸவ்ம்) என்பது இஸ்லாத்தின் ஐந்து தூண்களில் ஒன்றாகும்- இவை நம்பிக்கை, பிரார்த்தனை, பிச்சை, நோன்பு மற்றும் ஹஜ் அல்லது யாத்திரை.
குறிப்பாக நோன்பு காலத்தில், முஸ்லிம்கள் புகைபிடித்தல், உடலுறவு, கோபத்தை வெளிப்படுத்துதல் அல்லது வாக்குவாதங்களில் ஈடுபடுதல் மற்றும் ஒழுக்கக்கேடான செயல்களில் ஈடுபடுதல் போன்றவற்றைக் கட்டுப்படுத்த வேண்டும்.
கூடுதலாக, பிரார்த்தனை, குர்ஆனைப் படித்தல் மற்றும் புரிந்துகொள்வது மற்றும் தொண்டு வேலைகள் போன்ற கூடுதல் வழிபாட்டு நடைமுறைகள் ஊக்குவிக்கப்படுகின்றன. பல முஸ்லீம்களும் தங்கள் நோன்பு முடிந்த பிறகு அல்லது இப்தார் பொழுது மசூதிகளுக்குச் செல்கிறார்கள்.
இரக்கமுள்ள மனிதர்களாக இருப்பதற்கும், ஏழைகள், சாப்பிட முடியாதவர்கள் மற்றும் நம்மைச் சுற்றியுள்ள உலகத்துடன் மீண்டும் இணைய முடியாத மக்களின் தேவைகளைப் புரிந்துகொள்வதற்கும் இது ஒரு மாதம்.Professor Karima Laachir, Centre for Arab and Islamic Studies, ANU
வழிபாடு மற்றும் மதக் கடமையாக இருப்பதுடன், உண்ணாவிரதத்தின் ஆரோக்கிய நன்மைகளும் இருப்பதாக பேராசிரியர் Laachir குறிப்பிடுகிறார்.
"உடல் ரீதியாக, இது மிகவும் ஆரோக்கியமானது, ஏனெனில் இது உடலின் வளர்சிதை மாற்றத்தை ஒழுங்குபடுத்துகிறது, இது உடலின் நச்சுத்தன்மையையும் சுத்தப்படுத்துகிறது. எனவே, இது மிகவும் ஆரோக்கியமான செயலாக நிரூபிக்கப்பட்டுள்ளது, இடைப்பட்ட உண்ணாவிரதம் மற்றும் அது உடலுக்கு எவ்வாறு முக்கியம் என்பது பற்றி எங்களுக்குத் தெரியும்." என்று மேலும் விளக்குகிறார் பேராசிரியர் Laachir.

ஈத் என்றால் என்ன?
ஈத் என்பது 'பண்டிகை' அல்லது 'விருந்து' என்பதற்கான அரபு வார்த்தையாகும், மேலும் இஸ்லாமிய நாட்காட்டியில் இரண்டு முக்கிய ஈத்கள் உள்ளன: ஈத் அல்-பித்ர் மற்றும் ஈத் அல்-அதா.
முஸ்லிம்கள் ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்ற பிறகு, அதன் முடிவில் கொண்டாடப்படுவது ஈத்.
ஈத் அல்-பித்ர், 'சிறிய ஈத்' என்றும் குறிப்பிடப்படுகிறது, இது ரமலான் மாதத்தின் முடிவைக் குறிக்கும் மூன்று நாள் கொண்டாட்டமாகும்.
ஈத் அல்-பித்ர் என்பது ரமலான் மாதத்தில் ஒருவர் சாதித்ததைக் கொண்டாடுவதற்கான ஒரு வாய்ப்பாகும் என்று கூறுகிறார் Dr Keskin.
ஈதைத் தழுவும் முஸ்லிம்கள் ஜகாத் அல்-பித்ர் எனப்படும் தொண்டு செய்ய கடமைப்பட்டுள்ளனர், எனவே ஏழைகளும் ஈதைக் கொண்டாடலாம்.
பேராசிரியர் லாச்சிர் கூறுகிறார், ஈத் அல்-பித்ர் என்பது "ஒன்றுகூடல் மற்றும் மன்னிப்பின்" கொண்டாட்டமாகும், ஏனெனில் இது சமூக உணர்வை புத்துயிர் பெற செய்கிறது மற்றும் மன்னிப்பு தேட முஸ்லிம்களை ஊக்குவிக்கிறது.
மேலும், குழந்தைகள் குதூகலிக்கவும், புதிய நண்பர்களை உருவாக்கவும், கலாச்சாரத்தைப் பற்றி அறிந்து கொள்ளவும் இது ஒரு சிறந்த வாய்ப்பை வழங்குகிறது.

ஆஸ்திரேலிய முஸ்லீம் மக்கள் ஈத் எப்படி கொண்டாடுகிறார்கள்?
ஈத் அல் பித்ர் கொண்டாட்டங்கள் இஸ்லாமிய நாட்காட்டியில் 10 வது மாதத்தின் முதல் நாள் காலையில் சிறப்பு பிரார்த்தனைகளுடன் தொடங்குகின்றன.
உள்ளூர் மசூதிகள் மற்றும் சமூக மையங்களில் பிரார்த்தனைகள் நடத்தப்படும், அங்கு மக்கள் ஒருவருக்கொருவர் 'ஈத் முபாரக்', அதாவது 'மகிழ்ச்சியான ஈத்' என்று வாழ்த்திக் கொள்வார்கள்.
குடும்பங்களும் நண்பர்களும் ஒருவரையொருவர் சந்திப்பார்கள் மற்றும் ஈத் காலத்தில் முஸ்லீம் சமூக மக்கள் ஒன்றுக்கூடுவது பொதுவானவை.
"இது ஒரு குடும்பக் கொண்டாட்டமாகும், ஈத் அல்-பித்ர் கொண்டாட்டத்தில் எல்லோரும் ஒன்றிணைந்து மூன்று நாட்களுக்கு பலவகையான உணவுகள், சிறப்பு கேக்குகள் என விருந்து உண்டு மகிழ்வார்கள்" என்று பேராசிரியர் Laachir மேலும் கூறுகிறார்.
இருப்பினும், ஆஸ்திரேலிய முஸ்லிம்கள் தனித்துவமான கலாச்சார நடைமுறைகளுடன் பல நாடுகளில் இருந்து வந்தவர்கள் ஆகவே கொண்டாட்டங்களும் வேறுபடுகின்றன.

அலி அவான் பாகிஸ்தான் பின்னணியில் உள்ள ஆஸ்திரேலியர் ஆவார், அவர் ஒவ்வொரு ஆண்டும் ஈத் அல்-பித்ரின் போது மிகவும் பரபரப்பாக இருப்பார். அவர் ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய பன்முக கலாச்சார ஈத் திருவிழாக்களில் ஒன்றை ஏற்பாடு செய்கிறார்.
வெவ்வேறு பின்னணியில் உள்ள முஸ்லிம்களுக்கு இடையே "பெரிய" கலாச்சார வேறுபாடுகள் இருப்பதாக அவர் கூறுகிறார். ஆஸ்திரேலிய பல்கலாச்சார ஈத் திருவிழாவின் தலைவராக இருக்கும் அவரது பணி, அனைவரையும் ஒரே இடத்தில் ஒன்று சேர்ப்பதாகும்.
“சிலர் வெவ்வேறு உணவுகளை சமைப்பார்கள், அவர்கள் ஈத் நாளில் அணியும் வெவ்வேறு ஆடைகள். பின்னர், கொண்டாட்டம் என்று வரும்போது, அது சில செயல்பாடுகள், சில நிகழ்ச்சிகள், சில ஆய்வு முறைகள் மற்றும் இவை அனைத்தின் அடிப்படையில் இருக்கலாம்,” என்று திரு அவான் விளக்குகிறார்.
ஈத் பண்டிகையின் போது, வெவ்வேறு நிகழ்ச்சிகள், வெவ்வேறு கலாச்சாரங்கள் அனைத்தையும் ஒரே இடத்தில் கொண்டு வர முயற்சிக்கிறோம், அதுவே ஆஸ்திரேலியாவின் அழகு.Ali Awan, Australian Multicultural Eid Festival
பல இஸ்லாமிய நாடுகளை விட ஆஸ்திரேலியாவில் ஈத் கொண்டாட்டங்கள் மிகவும் மாறுபட்டதாகவும் சக்திவாய்ந்ததாகவும் உள்ளன என பேராசிரியர் Laachir கூறுகிறார்.
"ஆஸ்திரேலியாவில் உள்ள முஸ்லீம் சமூகத்தைப் பற்றிய அழகான விஷயம் என்னவென்றால், பெரும்பாலான கொண்டாட்டங்கள் சமூக மையங்களிலும் உள்ளூர் மசூதிகளிலும் நடக்கும், இது அனைத்து சமூகங்களையும் வெவ்வேறு பின்னணியில் ஒன்றிணைக்க முனைகிறது," என்று அவர் மேலும் கூறுகிறார்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக Pop Desi எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.





