இலினொய்ஸ் மாநிலத்தில் சிவாநந்தன் லெபோரட்டரிஸ் என்ற அமைப்பை நடத்தி வரும் பேராசிரியர் சிவாநந்தன், யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் பழைய மாணவர் ஆவார். அவரது நிறுவனம் அகச்சிவப்புக்கதிர் தொழில்நுட்பம், கதிரியக்கத்தைக் கண்டுபிடித்தல், உயிரியல் உணர்கருவிகள் முதலான துறைகளில் ஆய்வு செய்து வருகிறது. சூரிய மின்வலு உற்பத்தியின் அடுத்த படிமுறையை உருவாக்கும் முயற்சிகளிலும் ஈடுபட்டுள்ளது.
ஊடகங்கள் பல, இவரது செயற்பாட்டைத் தவறான தரவுகளுடன் வெளியிட்டிருந்தன. அவற்றின் உண்மையை, குலசேகரம் சஞ்சயனுடன் நீண்ட உரையாடலில் தெளிவாக விளக்குகிறார் பேராசிரியர் சிவலிங்கம் சிவாநந்தன்.