உலகை அச்சுறுத்தும் வகையில் பரவிவரும் coronavirus குறித்த விளக்கத்தை முன்வைக்கிறார் பிரபல வானொலியாளர் இரா.சத்தியநாதன் அவர்கள். நிகழ்ச்சி தயாரிப்பு: றைசெல்.
coronavirus என்றால் என்ன?
Coronavirus என்பது பெரும்பாலும் விலங்குகளைப் பாதிக்கும் ஒரு வைரஸ் (நோய் நுண்ணுயிர்) ஆகும். கால்நடைகள், பறவைகள் என்பவற்றையே இந்த வைரஸ் பெருமளவில் பாதிக்கும். விலங்குகளில் இருந்து இந்த வைரஸ், மனிதருக்கு தொற்றுகிறது. மனிதர்களுக்கு தொற்றும்போது இது சுவாசப்பையில் நியுமோனியாவை ஏற்படுத்துகிறது. மனிதர்களுக்கு பொதுவாக mild என்ற மெலிதான பாதிப்பையே இந்த வைரஸ் ஏற்படுத்தும் என்றபோதும், நமது உடலின் நோயெதிர்ப்புச் சக்திக்கு (immune system) அமைவாக கடுமையான விளைவுகளையும் ஏற்படுத்தும். சில வருடங்களுக்கு முன் பெருமளவில் பரவி பாதிப்பை உண்டாக்கிய sarsvirus குடும்பத்தைச் சேர்ந்ததே இந்த coronavirus. இது இப்போது, சீனாவில் இருந்து வெளிநாடுகளுக்குப் பரவி வருவதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
இந்த நோய்க்கான அறிகுறிகள் என்ன?
இந்த வைரஸ் காரணமாக, ஆரம்பத்தில், இருமல், காய்ச்சல், மூச்சுவிடுவதில் சிரம ம் என்பன ஏற்படும். கடுமையாக நோய்வாய்ப்பட்டால், organ failure என்ற உள் உறுப்புகள் செயல்படாநிலை ஏற்படும். இது வைரஸ் நோய் என்பதால் antibiotics என்ற ‘ உயிரியல் எதிரிகள்’ பயன் தராது. ஏனைய flu என்ற சளிச்சுரத்திற்கு பயன்படுத்தக்கூடிய antiviral மருந்துகளும் பயன்தராது. Coronavirus இற்கான மருந்து இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.
இது ஒருவரில் இருந்து மற்றவர்க்கு தொற்றக்கூடியதா?
ஆம், தொற்றக்கூடியது. Chinese Health Commission இதை உறுதி செய்திருக்கிறது. இந்த வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டு இதுவரை 17 பேர் இறந்திருக்கிறார்கள். சீனாவில் Beijing, Shanghai மற்றும் Chonging போன்ற பெருநகரங்கள் உட்பட 13 மாகாணங்களுக்கு இந்த நோய் இப்போது பரவியிருக்கிறது. அமெரிக்கா, தாய்லாந்து, தென்கொரியா, தாய்வான், ஜப்பான் ஆகிய நாடுகளிலும் சிலருக்கு இந்த நோய் ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. எமது நாட்டில், சீனா சென்று திரும்பிய ஒரு நபருக்கு, இந்த நோய் ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில், அவர் quarantine என்ற பாதுகாப்பில் வைக்கப்பட்டிருக்கிறார்.
இந்த வைரஸ் பற்றி நாம் பீதி கொள்ள வேண்டியது அவசியந்தானா?
இல்லை. World Health Organisation (WHO) உலக சுகாதார நிறுவனம் இந்த வைரஸ் தொடர்பாக health warning என்ற எச்சரிக்கையை மட்டும் இப்போது விடுத்திருக்கிறது. நிலைமை தீவிரமடைந்தால், Public Health Emergency பொதுமக்களின் நலம் தொடர்பான அவசரநிலையை அது விடுக்க க் கூடும். பொதுவாக நலத்துறையில் பணிபுரிவோர் மற்றும் குழந்தைகள், முதியவர்கள், நோய்வாய்ப்பட்டிருப்பவர்கள் எச்சரிக்கையாக இருக்கவேண்டியது அவசியம்.





