பூர்வீகக்குடி மக்களின் தொழில்நுட்பம் மற்றும் கலாச்சாரத்தின் மிகவும் சிக்கலான மற்றும் அதிநவீன எடுத்துக்காட்டுகளில் ஒன்று நெசவு நெய்தல். இதனை பின்னுதல், இழைத்தல் என்றும் சொல்லுவதுண்டு.
நெசவாளர்கள் அழகுக்கான பொருட்களை உருவாக்குகிறார்கள், ஆனால் செயல்முறையே ஆழமான கலாச்சார முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது.
நெய்த பொருட்கள் அவற்றை உருவாக்கும் பூர்வீகக்குடியின நெசவாளர்களைப் போலவே வேறுபட்டவை. ஒவ்வொரு வேலையும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பொருளாகும், இது நெசவாளர்களுக்கு அவர்களின் நாடு மற்றும் அவர்களின் மூதாதையர்களுக்கும் இடையே ஒரு புலப்படும் பிணைப்பை உருவாக்குகிறது.
நெசவு செயல்முறை உள்ளூர் வளங்களான நாணல்கள், பட்டைகள் மற்றும் தாவரங்களை சேகரித்து தயாரிப்பதன் மூலம் தொடங்குகிறது. கூடைகள், கிண்ணங்கள், கயிறுகள் மற்றும் வலைகள் போன்ற சிக்கலான பொருட்களை உருவாக்க இவை நெய்யப்படுகின்றன.
கலைஞரும் கல்வியாளருமான Cherie Johnson வடக்கு NSW-ஐ சேர்ந்த ஒரு Gomeroi பெண். அவர் 16 வயதில் இருந்து நெசவு செய்கிறார்.
நெசவு நெய்தல் என்பது ஒரு சமூக செயல்முறை.
வெவ்வேறு தலைமுறையினர் ஒன்றாக அமர்ந்து அரட்டை அடித்துக்கொண்டு , கதைகளைப் பகிர்ந்து கொண்டு மற்றும் மக்கள் ஏன் நெசவு செய்கிறார்கள் என்பதற்குப் பின்னால் உள்ள கலாச்சார அறிவைக் கற்றுக்கொள்கிறார்கள், இதனால் எதிர்கால சந்ததியினரும் நெசவுக் கதைகளைத் தொடர்கிறார்கள் என்று Ms Johnson கூறுகிறார்.

நெசவு நெய்தல் , பின்னுதல் அல்லது இழைத்தல் என்பது வெவ்வேறு நபர்களுக்கு வெவ்வேறு விடயங்களை குறிக்கிறது.
Luke Russel NSW இன் Newcastle பகுதியில் உள்ள ஒரு Worimi இனத்தவர்.
பாரம்பரிய மரப்பட்டை படகுகள், மீன்பிடி ஈட்டிகள் மற்றும் பிற கருவிகளை உருவாக்குவது என்பது அவரது மூதாதையர்களின் கருவிகளை உருவாக்கும் அறிவைக் கற்றுக்கொள்வதும் மற்றும் அதனை அடுத்த சந்ததியினருக்கு கற்றுக்கொடுப்பது என்பதாகும். நெய்தல் என்பது எனக்கு கயிறு திரித்தல் என்பதாகும் படகுகள் மற்றும் மீன்பிடி உபகரணங்களை கட்டுவதற்கு இது பெரிதும் பயன்படும் என்கிறார் Luke Russel.
நெய்தல் என்பது எனக்கு கயிறு திரித்தல் என்பதாகும் படகுகள் மற்றும் மீன்பிடி உபகரணங்களை கட்டுவதற்கு இது பெரிதும் பயன்படும்.Luke Russell, Cultural Knowledge Holder
பெண்கள் மட்டும் செய்யும் தொழில் என்பதற்கு மாறாக, பூர்வீகக்குடியினத்தில் ஆண்களும் நெசவு நெய்தல், பின்னுதல், இழைத்தல் தொழிலில் ஈடுபட்டுள்ளனர்.
சிறுவர்கள் பாரம்பரியமாக பெண்களுடன் நெசவுத் திறன்களைக் கற்றுக்கொள்கிறார்கள், சிறுவயதிலிருந்தே தொடங்கி, அவர்களின் பதின்மவயது வரை, ஒரு தாய்வழி படிநிலையின் வழிகாட்டுதலின் கீழ் இதனை கற்றுக்கொள்கிறார்கள் என்று விளக்குகிறார் திரு Russel.

கலைஞர் Nephi Denham வடக்கு குயின்ஸ்லாந்தில் உள்ள Cardwell பகுதியைச் சேர்ந்த ஒரு Girramay பாரம்பரிய உரிமையாளர்.
அவர் ஒரு கலைப் பயிற்சியைக் செய்துவருகிறார். அது கூடை பின்னுதல். அமைதியாக உட்கார்ந்து தனது படைப்புகளில் கவனம் செலுத்துவதற்கான எளிய மகிழ்ச்சிக்காக வீட்டில் செய்துவருகிறார். தன்னுடைய மாமாவிடமிருந்து இதனை கற்றுக்கொண்டதாக கூறுகிறார் Nephi Denham.
நெய்தல் என்பது ஒரு தியானம். உங்கள் எண்ணங்களை காட்சிப்படுத்த இது ஒரு வழியாகும்.
உண்மையான நினைவாற்றல் என்பது உள்நோக்கத்துடன் ஒன்றைச் செய்வதிலிருந்தும், அதில் உங்கள் எண்ணங்களைச் செலுத்துவதிலிருந்தும் வருகிறது, என்கிறார் Cherie Johnson.
புற்கள் மற்றும் பட்டைகள் போன்ற தாவர வளங்கள் நாடு முழுவதும் வேறுபடுகின்றன. ஆகவே நெய்தல் வேலைப்பாடுகளும் இடத்திற்கு இடம் வேறுபடும்.
ஆனால் நெசவாளர்கள் தாங்களாகவே தங்களின் சொந்த திறமை மற்றும் கையொப்ப பாணியை தங்கள் பொருட்களுக்கு கொண்டு வருகிறார்கள் என்று Ms Johnson கூறுகிறார்.
அதுமட்டுமல்ல பூக்கள், வேர்கள், பட்டைகள் போன்றவற்றிலிருந்து பெறப்படும் நிறங்கள் கொன்டு சாயம் பூசப்படுகிறது என்று மேலும் கூறுகிறார் Ms Johnson.
நெசவு செய்யப்பட்ட பொருளின் கட்டுமானம் நெசவாளரின் பண்புகள் மற்றும் திறன்களைப் பற்றிய நுண்ணறிவை வழங்க முடியும்.
சில சமயங்களில், பின்னப்பட்ட கூடையின் அடிப்பகுதியைப் பார்த்து கலைஞரை அடையாளம் காண முடியும் என்கிறார் Nephi Denham.

Cassie Leatham விக்டோரியாவில் உள்ள குலின் தேசத்தைச் சேர்ந்த Taungurung இனத்தைச் சேர்ந்த ஒரு பல்துறை கலைஞர் மற்றும் தலைசிறந்த நெசவாளர் ஆவார்.
பூர்வீகக்குடியினம் அல்லாதவர்கள் ஈடுபடவும், ஆழ்ந்து கேட்கவும் ஊக்குவிக்கப்படும் பூர்வீகக்குடியினக் கலைகளின் பட்டறைகளை நடத்திவருகிறார். இது பூர்வீகக்குடி மக்களுடன் பூர்வீகக்குடியினம் அல்லாதவர்கள் நெருங்குவதற்கு வாய்ப்பாக உள்ளதாக கூறுகிறார் Cassie Leatham.
நெறிமுறையை மதிப்பது முக்கியம். நமது அறிவை நாம் சுதந்திரமாக பகிர்ந்து கொள்ள முடியும் என்றாலும், தனிப்பட்ட லாபத்திற்காக அதை பயன்படுத்தாமல் இருப்பது முக்கியம். கூடுதலாக, நமது பூர்வீகக்குடி வழிகாட்டிகளின் போதனைகளை நாம் தொடர்ந்து அங்கீகரிக்க வேண்டும்.
பட்டறைகள் பெரும்பாலும் உள்ளூராட்சி நகரசபை மூலம் ஊக்குவிக்கப்படுகின்றன என்கிறார் Cassie Leatham.
பூர்வீகக்குடி மக்கள் உருவாக்கும் பொருட்கள் இப்போது அனைவரின் கவனத்தையும் பெற்றுள்ளது.
ஆஸ்திரேலியா முழுவதும் பெரிய மற்றும் சிறிய அருங்காட்சியங்களில் கண்காட்சிகள் மற்றும் விற்பனைகள் உள்ளன.
பூர்வீகக்குடி மக்களின் கலாச்சாரங்கள் மற்றும் சூழல்களின் பன்முகத்தன்மையை அருங்காட்சியங்களில் காட்சிப்படுத்துவது முக்கியம் என Ms Laetham வலியுறுத்துகிறார்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக Pop Desi எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.






