SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக Pop Desi எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
செயற்கை நுண்ணறிவு: மனித குலத்தின் நாசமா? மாநாடு சொல்லும் செய்தி என்ன?

Suganya (Tamil Oli - 4EB in Brisbane)
AI அல்லது Artificial Intelligence அல்லது செயற்கை நுண்ணறிவு என்று அழைக்கப்படும் தொழில்நுட்பம் மனித குலத்திற்கு பெரும் நன்மைகளைக் கொண்டுவரும் என்று சில நிபுணர்கள் கூறுகின்றனர். ஆனால் இது மனித குலத்திற்கு நாசத்தை ஏற்படுத்தும் என்று சில நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். இந்த பின்னணியில் உலகின் பெரும் தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்றும் 28 நாடுகள் கலந்துகொண்ட செயற்கை நுண்ணறிவு குறித்த மாநாடு கடந்த வாரம் பிரிட்டனில் நடைபெற்றது. ஆஸ்திரேலிய அறிவியல் துறை அமைச்சர் Ed Husic கலந்துகொண்ட இம்மாநாட்டில் பேசப்பட்ட கருத்துக்கள் குறித்தும், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் பலனும், பயமும் குறித்து விளக்குகிறார் பிரிஸ்பேன் 4EB தமிழ் ஒலி வானொலியின் நிகழ்ச்சி தயாரிப்பாளர் சுகன்யா அவர்கள். அவரோடு உரையாடுகிறார் றைசெல்.
Share