SKIP TO MAIN CONTENT

ஜனவரி 2020 முதல் நடைமுறைக்கு வரும் முக்கிய மாற்றங்கள்!

2020
Source: publicdomain

பிறந்திருக்கும் இந்த புதிய ஆண்டில் ஜனவரி மாதம் முதல் சில முக்கியமான சட்டங்கள் அல்லது அம்சங்கள் நடைமுறைக்கு வந்திருக்கின்றன. இது தொடர்பில் கலந்துரையாடுகிறார்கள் றைசல், சஞ்சயன் மற்றும் றேனுகா ஆகியோர்.


Published

Source: SBS



Skip to podcast episode content

பிறந்திருக்கும் இந்த புதிய ஆண்டில் ஜனவரி மாதம் முதல் சில முக்கியமான சட்டங்கள் அல்லது அம்சங்கள் நடைமுறைக்கு வந்திருக்கின்றன. இது தொடர்பில் கலந்துரையாடுகிறார்கள் றைசல், சஞ்சயன் மற்றும் றேனுகா ஆகியோர்.


நாட்டில் முதன்முறையாக வீடு வாங்குவோர் முதலில் தரவேண்டிய Deposit – முன்பணம் தொடர்பாக அரசு உதவ முன்வந்துள்ளது. இதன்படி வீட்டுக்கடனை பெறுவோர் முன்பணமாக ஐந்து சதவீதம் செலுத்த அரசு அவர்களின் சார்பில் மீதி முன்பணம் செலுத்தும் திட்டத்தை அரசு அறிமுகம் செய்துள்ளது.

PBS திட்டத்தின் கீழ் மார்பக புற்றுநோய் மற்றும் வலிப்பு ஆகிய நோய்களுக்கான 4 மருந்துகள் புதிதாக சேர்க்கப்பட்டிருக்கின்றன. அதேநேரம் PBS Safety Net threshold -ஐ எட்டுவதற்கான தொகை concession card வைத்திருப்பவர்களுக்கு 390 டொலர்களிலிருந்து 316.80 டொலர்களாக குறைக்கப்பட்டுள்ளது. சாதாரண நோயாளிகளுக்கு 1550.70 டொலர்களிலிருந்து 1486.80 ஆக குறைக்கப்பட்டுள்ளது.  

விக்டோரியாவில் பொதுப்போக்குவரத்து கட்டணம் நாளொன்றுக்கு 20 சதங்களால் அதிகரித்திருக்கிறது. நாளாந்த Zone1 full fare கட்ணம் 9 டொலர் ஆகியிருக்கிறது.

விக்டோரியாவில் உள்ளவர்கள் உங்களது மின்கட்டணத்தை பார்த்துக்கொள்ளுங்கள். ஏனென்றால் ஜனவரி முதல் மின்கட்டணம் சற்று அதிகரிக்கிறது.

தலைநகரான கான்பரா அமைந்துள்ள ACT பிராந்தியத்தில் வாழும் மக்கள் சிறியளவிலான கஞ்சாவைப் பயன்படுத்துவதையும், கஞ்சா வைத்திருப்பதையும், கஞ்சா வளர்ப்பதையும் அனுமதிக்கும் சட்டம் ஜனவரி 31 முதல் நடைமுறைக்கு வருகிறது. ஆஸ்திரேலிய நாட்டில் இப்படி கஞ்சா பயன்படுத்துவதை சட்டப்பூர்வமாக்கிய முதல் நாடாளுமன்றமாக ACT நாடாளுமன்றம் திகழ்கிறது.

மேற்கு ஆஸ்திரேலிய மாநிலத்தில் இதுவரை காலமும் வேக கண்காணிப்பு கமரா எங்கெங்கு வைக்கப்பட்டுள்ளது என்ற அறிவிப்பு- speed camera locations வாகன ஓட்டிகளுக்கு தெரியப்படுத்தப்படுவது வழக்கம். ஆனால் ஜனவரி முதல் இம்முறை நீக்கப்பட்டுள்ளது.

சிட்னி மெல்பேர்னைப் போலவே குயின்ஸ்லாந்து மாநிலத்திலும் வாகனம் ஓட்டும்போது கைபேசி பயன்படுத்துபவர்களுக்கான அபராதம் அதிகரிக்கிறது. இதன்படி அபராதம் 400 டொலர்களிலிருந்து 1000 டொலர்களாகவும் டீமெரிட் புள்ளிகள் மூன்றிலிருந்து நான்காக அதிகரிக்கப்படுகிறது.

நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் சிகரெட் பிடித்துவிட்டு அதன் அடித்துண்டினை காரிலிருந்து வெளியே வீசும் ஓட்டுநர்கள் 5 டீமெரிட் புள்ளிகளை இழக்கும் அதேநேரம் 660 டொலர்கள் அபராதமும் செலுத்த வேண்டும். அதேநேரம் total fire ban -தகனத்தடை விதிக்கப்பட்ட நாட்களில் இவ்வாறு நடந்துகொள்பவர்கள் அந்த இடத்திலேயே 10 டீமெரிட் புள்ளிகளை இழக்கும் அதேநேரம் சுமார் 11 ஆயிரம் டொலர்கள் வரையான தண்டப்பணமும் செலுத்த நேரிடும்.

சிட்னியின் பிரபலமான LOCKOUT சட்டத்தில் இம்மாதம் முதல் மாற்றம் வந்திருக்கிறது. அதாவது சிட்னி CBD மற்றும் Oxford Street பகுதியிலுள்ள களியாட்ட விடுதிகளுக்கு அதிகாலை 1.30 மணிக்கு பின்னர் எவரையும் அனுமதிப்பதில்லை என்ற சட்டம் நீக்கப்படுகிறது.

Parental Leave Pay and Dad and Partner Pay பெறுவதற்கான work test இல் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது.

முற்றுமுழுதாக புதுப்பிக்கத்தக்க ஆற்றல் கொண்ட எரிசக்தி பயன்படுத்தும் நகரங்களில் ஒன்றாக ஜனவரி 01 2020 முதல் ACT அமைகிறது.


Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now