நோய்த் தடுப்பு தொடர்பான ஆஸ்திரேலிய தொழில்நுட்ப ஆலோசனைக் குழு அளித்த ஆலோசனையை விளக்குமாறு இரண்டு நிபுணர்களிடம் SBS செய்திப் பிரிவு கேட்டறிந்துள்ளது. இது குறித்து Amelia Dunn எழுதிய விவரணத்தைத் தமிழில் தருகிறார் குலசேகரம் சஞ்சயன்.
COVID-19 தடுப்பூசியை யார் போட வேண்டும், எவர் போடக் கூடாது?

A medical worker fills a syringe with a dose of the Pfizer-BioNTech COVID-19 vaccine as the country launches its vaccination campaign on February 17, 2021. Source: Anadolu
நீண்ட காலம் காத்திருந்தோம்.... இப்போது COVID-19 தடுப்பூசி நாட்டில் வழங்கப்பட ஆரம்பிக்கிறது. உலகெங்கிலுமுள்ள பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு ஏற்கனவே தடுப்பூசி போடப்பட்டுள்ளது. முடிவுகள் நம்பிக்கை தருபவை என்று தோன்றுகிறது - ஆனால் அதற்காக, இங்குள்ளவர்களுக்கு இந்தத் தடுப்பூசியின் பாதுகாப்பு குறித்து கேள்விகள் இல்லை என்று அர்த்தப்படுத்தக் கூடாது.
Share