நேஹா குமாரின் தாயார் ரேணுவுக்கு 2014-ஆம் ஆண்டு மார்பகப் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது.
மார்பகப் புற்றுநோய் குறித்த அறிகுறிகளை அவரது தாயார் கண்டுகொள்ளாமல் இருந்ததாகவும் மிகவும் தாமதமாகிய பின்னரே சிகிச்சை பெற ஆரம்பித்ததாகவும் நேஹா கூறுகிறார்.
சிகிச்சை பெற்ற பிறகு, ஒரு வருடம் கழித்து 2015- இல் ரேணு இறந்தார்.
புலம்பெயர்ந்தவர்களில் பலர் அவர்களது உடல் ஆரோக்கியத்திற்கு முன்னுரிமை கொடுப்பதில்லை என்று கூறும் Pink Sari நிறுவனத்தின் தலைவர் சாந்தா விஸ்வநாதன் குறிப்பாக ஆஸ்திரேலியாவிற்கு புதிதாக குடியேறுபவர்கள் இங்கு குடியமர்வதில் கவனம் செலுத்தும் போது அவர்கள் தங்களின் உடல் ஆரோக்கியத்தை கவனிக்க தவறிவிடுகிறார்கள் என்று கூறுகிறார்.
இந்தியாவை பூர்வீகமாகக் கொண்ட நிஷி பூரி தொண்ணூறுகளின் முற்பகுதியில் ஆஸ்திரேலியாவுக்கு வந்தபோதுதான் கருப்பை கழுத்து புற்றுநோய் cervical screening பரிசோதனை பற்றி கேள்விப்பட்டதாகக் கூறினார்.
Cervical Screening செய்முறை குறித்த பயம் காரணமாக பல முறை தான் இந்த பரிசோதனையை தள்ளிபோட்டதாகவும் பின்னர் இறுதியில் பரிசோதனை செய்து கொண்டதாகவும் கூறுகிறார் Nishi Puri
கருப்பை கழுத்து புற்றுநோய் பரிசோதனையை சுய-சேகரிப்பு self collection மூலம் செய்துக்கொள்வது குறித்த விழிப்புணர்வைப் பரப்புவதற்காக ஆஸ்திரேலிய அரசின் Own It பிரச்சாரத்திலும் நிஷி இணைந்துள்ளார்.
பெண்கள் புற்றுநோய் வருவதற்கு முன் அதனை தடுக்கும் வகையில் முன்கூட்டியே கண்டறியும் பரிசோதனைகளில் ஈடுபடுவதை பரவி வரும் தவறான தகவல்கள் தடுப்பதாக Dr Mariam Chaalan கூறுகிறார்.
SBS Examines-இற்காக Olivia Di Iorio ஆங்கிலத்தில் எழுதிய விவரணத்தை தமிழில் தயாரித்து வழங்குகிறார் செல்வி.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக SBS South Asian எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tunein பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள். SBS South Asian YouTube channel ஊடாக எமது podcasts மற்றும் videos-ஐப் பார்வையிடுங்கள்.