Sleep on it — கொஞ்சம் வித்தியாசமாகச் சொல்லுகிற மாதிரி இல்லையா?
உண்மையாகப் பார்த்தால், எதையாவது உங்கள் படுக்கையில் வைத்து அதன் மீது தூங்கப் போறீர்கள் என்பது போல் இருக்கும்.
ஆனால் இதற்கு மற்றொரு அர்த்தமும் உள்ளது — ஒரு முடிவை எடுப்பதற்கு முன் சிறிது நேரம் யோசிக்க வேண்டும். சில சமயம் ஒரு இரவு முழுவதும் கூட அதாவது படுக்கைக்கு சென்று தூங்குவதன் மூலம் மேலும் யோசிக்க நேரம் கிடைத்து, திடீரென முடிவெடுப்பதைத் தவிர்க்கலாம்.
இந்த சொற்றொடர் மிகவும் பழமையானது. 1519-ல், இங்கிலாந்தின் மன்னர் எட்டாம் ஹென்றி பயன்படுத்தியபோதுதான் இந்த சொற்றொடர் முதன்முதலில் பதிவாகியது . ஒரு முக்கிய முடிவை எடுக்கும் முன், ‘இது குறித்து நான் தூங்கி கனவு காண்கிறேன்’ என்று அவர் கூறினார். அப்போதே கூட, ஒரு நல்ல இரவு உறக்கம் தெளிவாக யோசிக்க உதவும் என்பதை மக்கள் அறிந்திருந்தார்கள்.
Sleep on it’ என்ற சொற்றொடரை நாமும் இன்று அதிகமாகவே பயன்படுத்துகிறோம்.
உதாரணமாக, யாராவது உடனடியாக ஏதாவது தேர்வு செய்யச் சொன்னால், ஆனால் நீங்கள் விரும்பவில்லை என்றால், நீங்கள் இப்படிச் சொல்லலாம்:
- I’m not sure. I’ll sleep on it and tell you tomorrow.
அல்லது வேலையிடத்தில் :
- My manager wants an answer today, but I think I’ll sleep on it first.
அன்றாட சூழலில், உதாரணமாக ஒரு பயணத்தை முடிவு செய்யும்போது:
- I’m not sure if I want to go hiking this weekend. Let me sleep on it.
நீங்கள் ஆலோசனை கொடுக்கும்போதும் Sleep on it சொற்றொடரை பயன்படுத்தலாம்:
- Don’t rush your choice — sleep on it and see how you feel in the morning.
ஆங்கிலத்தில் Josipa Kosanovic தயாரித்த நிகழ்ச்சியை தமிழில் தயாரித்து வழங்குகிறார் செல்வி.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக SBS South Asian எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்து கொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள். SBS South Asian YouTube channel ஊடாக எமது podcasts மற்றும் videos-ஐப் பார்வையிடுங்கள்.



