Take it easy - மக்கள் இப்படி சொல்வதை நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். உண்மையில், இந்த சொற்றொடர் நீங்கள் எதையையோ இலகுவாக எடுத்துக்கொள்வது என்று பொருள்படும்
நாம் பெரும்பாலும் யாரையாவது ஓய்வெடுக்குமாறு அல்லது அமைதியாக இருக்க சொல்ல இதைப் பயன்படுத்துகிறோம், குறிப்பாக அவர்கள் மன அழுத்தத்தில் இருந்தால் இந்த சொற்றொடரை பயன்படுத்துகிறோம் .
உதாரணமாக, ஒருவர் தனது சாவியைக் கண்டுபிடிக்க முடியாததால் வருத்தமாக இருக்கும் போது , நீங்கள் இவ்வாறு சொல்லலாம்:
- Take it easy. I’m sure we’ll find them. I’ll help you look for them.
அல்லது யாராவது தங்கள் சக ஊழியர் ஏதாவது செய்ய மறந்துவிட்டதால் கோபமாக இருந்தால், நீங்கள் இவ்வாறு சொல்லலாம்:
- Take it easy. I’m sure they’ll do it tomorrow.
இதற்கு 'அதிகமாக கடினமாக உழைக்காதே' என்ற கூடுதல் அர்த்தமும் இருக்கலாம். குறிப்பாக யாராவது அதிகமாக வேலை செய்தால் அல்லது நோய்வாய்ப்பட்டிருந்தால் இந்த சொற்றொடரை பயன்படுத்தலாம் . உதாரணமாக, உங்கள் நண்பர் ஒரு வேலையை அவசரமாக முடிக்க முயலும் போது, நீங்கள் இவ்வாறு சொல்லலாம்:
- Take it easy! There’s no rush.
அல்லது உங்கள் சக ஊழியருக்கு வேலையில் அந்த வாரம் முழுவதும் கடினமாக இருந்திருந்த நிலையில் அவர் வெள்ளிக்கிழமை மதியம் அலுவலகத்தை விட்டு செல்லும்போது, நீங்கள் இவ்வாறு கூறலாம்:
- Take it easy this weekend. You deserve it!
நினைவில் கொள்ளுங்கள், ஆங்கிலம் கற்றுக்கொள்வது மன அழுத்தத்தை ஏற்படுத்த வேண்டியதில்லை. Take it easy - ஒரு நேரத்தில் ஒரு சொற்றொடரை கற்போம் .
ஆங்கிலத்தில் Josipa Kosanovic தயாரித்த நிகழ்ச்சியை தமிழில் தயாரித்து வழங்குகிறார் செல்வி.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக SBS South Asian எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்து கொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள். SBS South Asian YouTube channel ஊடாக எமது podcasts மற்றும் videos-ஐப் பார்வையிடுங்கள்.


